கிணற்றில் திடீர் விஷவாயு… சிக்கிய தொழிலாளி… மீட்க போக தீயணைப்பு வீரர்!- பதறவைத்த அடுத்தடுத்த மரணங்கள்

கிணற்றில் திடீர் விஷவாயு… சிக்கிய  தொழிலாளி… மீட்க போக தீயணைப்பு வீரர்!- பதறவைத்த அடுத்தடுத்த மரணங்கள்

கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விஷவாயில் கூலித் தொழிலாளி ஒருவர் சிக்கினார். அவரை காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் பலியானார். இந்த சோக சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது.

கிணற்றில் திடீர் விஷவாயு… சிக்கிய  தொழிலாளி… மீட்க போக தீயணைப்பு வீரர்!- பதறவைத்த அடுத்தடுத்த மரணங்கள்

கிணற்றில் திடீர் விஷவாயு… சிக்கிய  தொழிலாளி… மீட்க போக தீயணைப்பு வீரர்!- பதறவைத்த அடுத்தடுத்த மரணங்கள்

பெரம்பலூர் மாவட்டம், செல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது வயலில் புதிதாக கிணறு தோண்டி வருகிறார். இதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் கிணற்றை வெடிவைத்து வெட்டி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு வெடிவைத்து வைத்து வெட்டியும் தண்ணீர் வராததால் நேற்று காலை 10 மணியளவில் கிணற்றில் சைடு போர் போட்டுள்ளனர் லட்சுமணன். இந்தநிலையில் சைடு போரில் தண்ணீர் வருகிறதா என மதியம் 5 மணியளவில் உள்ளே சென்று பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் விஷவாயு தாக்கி மயங்கி கிணத்துக்குள் விழுந்துள்ளார். இதனை பார்த்து அவரைக் காப்பாற்ற சென்ற பாஸ்கர் என்பவரும் விஷவாயு தாக்கி விழுந்துள்ளார்.

கிணற்றில் திடீர் விஷவாயு… சிக்கிய  தொழிலாளி… மீட்க போக தீயணைப்பு வீரர்!- பதறவைத்த அடுத்தடுத்த மரணங்கள்

இதுகுறித்து தகவலறிந்து பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர் ராஜ்குமார், தனபால், பால்ராஜ் ஆகியோர் விரைந்து சென்று கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கினர். அவர்களும் கிணற்றுக்குள் மயங்கி விழுந்ததால் பதற்றம் அதிகரித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை தலைவர் தாமோதரன் தலைமையில் தீயணைப்பு படையினர் ஆக்சிஜன் பெட்டிகளுடன் விரைந்து வந்து கிணற்றுக்குள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மயங்கிய நிலையில் பாஸ்கரை மீட்டனர்.

கிணற்றில் திடீர் விஷவாயு… சிக்கிய  தொழிலாளி… மீட்க போக தீயணைப்பு வீரர்!- பதறவைத்த அடுத்தடுத்த மரணங்கள்

கூலித் தொழிலாளர் ராதாகிருஷ்ணன் இறந்துவிட்ட நிலையில் மயக்கமடைந்த 3 தீயணைப்பு வீரர்களில் ராஜ்குமார் மூச்சுத்திணறி உயிரிழந்தார. மீட்கும் பணியில் மயக்கமடைந்த மேலும் 2 தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷவாயு தாக்கியவரை காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்ததோடு, 2 தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.