தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் முன்களப் பணியாளர் மரணமா?

 

தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் முன்களப் பணியாளர் மரணமா?

தூத்துக்குடி மாவட்டம் சின்னம்ம நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் கொசு ஒழிப்பு பணியாளராக பணியாற்றி வந்தார். நாடு முழுவதும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அண்மையில் மனோகரனும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். கடந்த 31ம் தேதி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அவருக்கு திடீரென வலிப்பு வந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் முன்களப் பணியாளர் மரணமா?

தடுப்பூசி செலுத்தி கொண்டதால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். மேலும், அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஜனவரி 21-ஆம் தேதி தடுப்பு போட்டுக் கொண்டதில் இருந்து அவருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மனோகரனின் மரணம் தொடர்பாக இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. உயிரிழந்தவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து, உயிரிழந்ததன் காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.