‘காட்டு யானை தாக்கி தொழிலாளர் பலி’: கோவிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்!

 

‘காட்டு யானை தாக்கி தொழிலாளர் பலி’: கோவிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்!

ராசிபுரம் அருகே சாலையில் உலாவிய காட்டு யானை தாக்கியதில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அண்மைகாலமாக யானை தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் அதிக அளவில் யானைகள் நடமாட்டம் இருக்கிறது. உணவு பற்றாக்குறையாலும், வனப்பகுதிக்குள் அழிக்கப்படுவதும் யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் கோவை நரசிம்மபுரம் அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய தொழிலாளியை காட்டு யானை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

‘காட்டு யானை தாக்கி தொழிலாளர் பலி’: கோவிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்!

கோவை மாவட்டம், ராசிபுரம் ஆத்தூர் வனப்பகுதியில் செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்த 45 வயதான கார்த்திக் என்பவரின் சடலம் கிடந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கார்த்திக் நேற்று கோவிலுக்கு சென்று திரும்பியதாகவும், திரும்பும் வழியில் காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.