18 மாதங்களுக்கு பின் அலுவலகத்துக்கு வந்த விப்ரோ நிறுவன ஊழியர்கள்

 

18 மாதங்களுக்கு பின் அலுவலகத்துக்கு வந்த விப்ரோ நிறுவன ஊழியர்கள்

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் பணியாளர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அலுவலகத்துக்கு திரும்பியுள்ளனர்.

18 மாதங்களுக்கு பின் அலுவலகத்துக்கு வந்த விப்ரோ நிறுவன ஊழியர்கள்

கொரோனா சூழலை ஒட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மட்டுமல்லாது, தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர். விற்பனை, மார்க்கெட்டிங் வாடிக்கையாளர் உறவு நிர்வாகம் போன்ற வாடிக்கையாளர்களை சார்ந்த பணியில் இருக்கும் பணியாளர்கள் மட்டும் அலுவலகம் வந்து பணியாற்றினர்.

இந்நிலையில், திங்கள் கிழமை முதல் அலுவலகங்களுக்கு வருமாறு ஊழியர்களுக்கு விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர்கள், இன்று முதல் கொரோனா விதிகளை பின்பற்றி பணிக்கு வந்தனர். வாரத்தில் இரு நாட்கள் மட்டும் அலுவலகத்துக்கு பணியாற்ற வேண்டுமென விப்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் டிசிஎஸ், ஹெச்.சி.எல், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களும் அலுவலகத்துக்கு வருமாறு பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளாது.