’நீ தாக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும்’ ஒருவரை ஒருவர் எச்சரித்துக்கொள்ளும் அமெரிக்கா –ஈரான்

’நீ தாக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும்’ ஒருவரை ஒருவர் எச்சரித்துக்கொள்ளும் அமெரிக்கா –ஈரான்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் அவ்வப்போது உரசல் வருவது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். அவ்வப்போது இந்த உரசல் தடித்த வார்த்தைகளாகவும் வெளிப்படுவது உண்டு. இரு நாடுகளிடையே போர் பதற்றம் எப்போதும் நிலவிக்கொண்டே இருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதில் பல பேர் கொல்லப்பட்டனர். அவர்களில்  ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியும் ஒருவர்.

’நீ தாக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும்’ ஒருவரை ஒருவர் எச்சரித்துக்கொள்ளும் அமெரிக்கா –ஈரான்

சுலைமானி குறித்து பல்வேறு குற்றசாட்டுகளைக் கூறி, அவர் கொல்லப்பட்டது சரிதான் என்பதாக நியாயம் கற்பித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

தம் நாட்டு ரானுவ தளபதி கொல்லப்பட்டது பெரும் அவமரியாதையாகக் கருதியது ஈரான். அதனால், அமெரிக்காவின் மீது அது போர் தொடுக்கும் என்று பலர் கருதினார்கள். இந்த நிலை இன்று வரை நீர் பூத்த நெருப்பாக நீடித்து வருகிறது.

’நீ தாக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும்’ ஒருவரை ஒருவர் எச்சரித்துக்கொள்ளும் அமெரிக்கா –ஈரான்

சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘ஈரான் எங்களைத் தாக்கினால் அதற்கு எதிர்வினையாக ஆயிரம் மடங்கு திருப்பி தாக்குதலை அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என எச்சரித்தார்.

இதனால், இந்தப் பிரச்சினை மீண்டும் பேசுபொருளானது. தற்போது ஈரான் நாட்டு செய்தி தொடர்பாளர் பேசுகையில், ஈரானைப் பற்றி அமெரிக்கா தொடர்ந்து தவறாகவே பேசிவருகிறது. அமெரிக்கா தவறைச் செய்யாது என நினைக்கிறோம். அப்படிச் செய்தால் எதிர்விளைவுகளை ஈரானின் பதிலடியை சந்திப்பார்கள்’ என்று கூறியிருக்கிறார்.

இரு தரப்பிலிருந்து நீயா நானா வார்த்தை போர் தொடங்கிவிட்டது. இது ஆயுதபோராக மாறாமல் இருப்பதே இருநாட்டு மக்களுக்கு நல்லது.