மத்திய அரசின் கடும் எதிர்ப்பால் பணிந்த வாட்ஸ்அப்… பயனர்களை வற்புறுத்த மாட்டோம் என உறுதி!

 

மத்திய அரசின் கடும் எதிர்ப்பால் பணிந்த வாட்ஸ்அப்… பயனர்களை வற்புறுத்த மாட்டோம் என உறுதி!

டிஜிட்டல் தளங்களில் கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்அப்பின் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகள் பல சர்ச்சைகளுக்கு வித்திட்டது. புதிய கொள்கைகளை அதன் பயனர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிப்ரவரி 8ஆம் தேதிக்குப் பின் அவர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்ற தகவலை வாட்ஸ்அப் நிர்வாகம் விடுத்தது. இதனைத் தங்களது பயனர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டு ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று எண்ணிய வாட்ஸ்அப்புக்கு எலான் மஸ்க் மூலம் வந்தது அபாய எச்சரிக்கை. பயனர்களின் தரவுகளைப் பேஸ்புக் போன்ற மூன்றாம் தர நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதே அக்கொள்கையின் பிரதான நோக்கம்.

மத்திய அரசின் கடும் எதிர்ப்பால் பணிந்த வாட்ஸ்அப்… பயனர்களை வற்புறுத்த மாட்டோம் என உறுதி!
மத்திய அரசின் கடும் எதிர்ப்பால் பணிந்த வாட்ஸ்அப்… பயனர்களை வற்புறுத்த மாட்டோம் என உறுதி!

கூடவே ஆன்லைன் வர்த்தகம் வேறு கொடி கட்டி பறப்பதால் அதற்குள்ளும் நுழைந்து பெத்த லாபம் பார்க்க வேண்டும் என்பது வாட்ஸ்அப்பின் இரண்டாவது நோக்கம். இதனால் தங்களது ரகசியங்கள் கசியக் கூடும் என்று உணர்ந்த வாட்ஸ்அப் பயனர்கள் அதனை டெலிட் செய்து சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு தாவினர். இதனால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் இழந்தது. இதனை உடனே சரிசெய்ய புதிய தனியுரிமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தேதியை மே மாதம் 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.

அந்த அறிவிப்பின்போது கூட அக்கொள்கைகள் நீக்கப்படும் என வாட்ஸ்அப் கூறவில்லை. மாறாக நேரம் கொடுக்கிறோம் அதுவரையில் கொள்கைகளைப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள் என்ற சொன்னது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் எதுவும் பகிரப்படாது என்று உறுதியளித்தாலும் பயனர்கள் நம்ப தயாராக இல்லை. இப்போதும் திருத்தப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்ள பயனர்களை வற்புறுத்தி வருகிறது. இதனிடையே இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான கடந்த விசாரணையில் மத்திய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

மத்திய அரசின் கடும் எதிர்ப்பால் பணிந்த வாட்ஸ்அப்… பயனர்களை வற்புறுத்த மாட்டோம் என உறுதி!

அதில், “மத்திய அரசு தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவை (Personal Data Protection Bill) சட்டமாக்குவதற்குள் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்களை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என வாட்ஸ்அப் துடிக்கிறது. இதற்காக பயனர்களை ஏமாற்றி கொள்கைகளுக்கு ஒப்புதல் பெற தந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய கொள்கைகளை ஏற்குமாறு பயனர்களுக்கு நோட்டிபிக்கேஷன்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. இது இந்திய போட்டி நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது. ஆகவே இதுதொடர்பான நோட்டிபிக்கேஷன்களை பயனர்களுக்கு அனுப்பவதற்கு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

WhatsApp's new privacy policy delayed until May 15

இச்சூழலில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வாட்ஸ்அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாட்ஸ்அப் புதிய தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்துவதை தாமாக முன்வந்து நிறுத்திவைப்பதாகவும், மத்திய அரசு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் வரை காத்திருப்பதாகவும் கூறினார். அதேபோல அதுவரை பயனர்களை கொள்கையுடன் உடன்படுங்கள் என கட்டாயப்படுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தார். இதற்கு முன்னதாக கடந்த மே மாதம், இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் எந்தவிதத்திலும் யாரிடமும் பகிரப்படாது என்றும், பாதுகாக்கப்படும் எனவும் மத்திய அரசிடம் வாட்ஸ்அப் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.