Home உலகம் செவ்வாய் கிரகத்தின் விசித்திரங்கள் – நாசா வெளியிட்டிருக்கும் போட்டோக்கள்

செவ்வாய் கிரகத்தின் விசித்திரங்கள் – நாசா வெளியிட்டிருக்கும் போட்டோக்கள்

விண்வெளி என்றைக்கும் ஆச்சர்யமும் சுவாரஸ்யமும் நிறைந்தது தான். மனிதர்கள், இயற்கையை ரசித்துகொண்டு மட்டுமே இல்லை. அதன் ரகசியம் அறிய ஏராளமான ஆய்வுகளும் செய்கின்றனர்.

PC: Nasa Website

செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது… அங்கு காற்று இருக்கிறதா… பூமி போல மனிதர்கள் அல்லது ஏதேனும் உயிர்கள் வாழ்கின்றனவா… உட்பட ஏராளமான கேள்விகள் எல்லோரிடமும் உண்டு. விஞ்ஞானிகளுக்கு இவற்றோரு சேர்த்து ஆயிரம் கேள்விகளும் இருக்கும்.

PC: Nasa Website

செவ்வாய் கிரகத்தின் நிலவரங்களைப் பற்றி எப்போது செய்தி வந்தாலும் ஆர்வமாகப் படிக்கும் பழக்கம் நமக்கு உண்டு. தற்போது அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆய்வுமையமான நாசா, செவ்வாய் கிரகத்தின் போட்டோக்களை வெளியிட்டுள்ளது.

PC: Nasa Website

இன்றிலிருந்து சரியாக 15 ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய ஆர்பிட்டர் தந்த  படங்களை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அதன் நிலப்பர்ப்பு, சுற்றுவெளி என பல படங்களை அனுப்பியுள்ளது ஆர்ப்பிட்டர்.

PC: Nasa Website

ஒவ்வொரு படங்களைப் பற்றியும் விரிவான குறிப்பை நாசா அதன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

விண்வெளி குறித்து செய்திகளைச் சேகரித்து வரும் ஆர்வலர்களுக்கு பெரும் பரிசாகக் கிடைத்துள்ளன இந்தப் படங்கள்.

PC: Nasa Website

சோஷியல் மீடியாவில் நாசா வெளியிட்டுக்கும் செவ்வாய் கிரகத்தின் படங்கள் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

Most Popular

‘1.48 லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ தேர்வு எழுதவில்லை’- மத்திய அரசு தகவல்

இந்த ஆண்டு நடைபெற்ற ஜே.இ.இ தேர்வை 1.48 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கல்லூரிகளில் செமெஸ்டர் தேர்வுகள்...

ஊசிமணி, பாசிமணி விற்ற நரிக்குறவர்கள் இனி தொழில்முனைவோர்!

கொரோனா ஊரடங்கில் உணவு சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மட்டும் தப்பித்துக்கொண்டனர். மற்ற தொழிலதிபர்களின், தொழிலாளர்களின் பாடு படு திண்டாட்டமாகிவிட்டது. பலரும் இழந்த வாழ்வாதாரத்தினை இன்னமும் மீட்க முடியாமல் தவிக்கின்றனர். ரயில், பஸ்களில்...

அமெரிக்காவில் அடாவடியாக கைமாறிய ’டிக் டாக்’ – சீனா குற்றச்சாட்டு

ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் ’டிக் டாக்’ நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. வர்த்தக விதிமீறல்களை மீறி அடாவடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி...

‘இந்தி தெரிந்தால் தான் வங்கிக்கடன்’ எனக்கூறிய வங்கி மேலாளர் இடமாற்றம்!

இந்தி தெரியாததால் வங்கிக்கடன் தர மறுத்த ஐ.ஓ.பி வங்கி மேலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவர் பல்வேறு அரசு...
Do NOT follow this link or you will be banned from the site!