பொலிவான சருமம் தரும் பசும்பால்!

 

பொலிவான சருமம் தரும் பசும்பால்!

பால் குடித்தால் கால்சியம் சத்து கிடைக்கும். எலும்புகள் உறுதியாகும் என்று தெரியும். பாலைக் கொண்டு சருமத்தை மெருகேற்ற முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? பசும்பாலில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் நலனைப் பாதுகாக்கும் என்ற உண்மை பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. பாலின் அழகு பயன்கள் பற்றித் தெரிந்துகொள்வோம்!

பொதுவாக கறந்த பாலை அருந்துவது இல்லை. அதைக் காய்ச்சிதான் குடிப்போம். அப்படி செய்வதன் மூலம் பாலில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் சிதைந்துவிடுகின்றன. எனவே, சருமத்துக்கு கறந்த பால்தான் சிறந்தது.

பொலிவான சருமம் தரும் பசும்பால்!

பசும் பால் ஸ்கின் டோனர், மாய்ச்சரைசர், ஸ்கின் கிளென்சர், ஃபேர்னஸ் ஏஜென்ட், ஆன்டி ஏஜிங் ஏஜென்ட் என பல அம்சங்களைக் கொண்டது.

ஒரு கின்னத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் பால் எடுத்துக்கொண்டு, பருத்தி பஞ்சு கொண்டு நனைத்து, பிழிந்து சருமத்தில், கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். 10 – 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவுவதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்கு, இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன.

பாலுடன் கொஞ்சம் பழுத்த வாழைப் பழத்தைப் போட்டு மசித்து சருமத்தில் பூசி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உலர்ந்த சருமம் ஈரப்பதத்தைப் பெரும்.

பாலை சருமத்தில் தடவி ஊற விட்டு வந்தால் சருமம் பொலிவு பெறும். பாலில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் டைரோசின் (tyrosine) என்ற ரசாயனத்தைச் சுரக்கத் தூண்டுகிறது. இந்த டைரோசின்தான் நம்முடைய சருமத்தின் நிறத்தை உறுதி செய்யும் மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இந்த டைரோசின் போதுமான அளவில் சுரப்பதன் மூலம் சருமம் பொலிவு பெறும், எண்ணெய்ப் பிசுக்கு இருக்காது. சந்தனத்தைப் பாலுடன் கலந்து சருமத்தில் தடவினால் மேலும் அதிக பொலிவைப் பெறலாம்.

பால் ஒரு இயற்கை சன்ஸ்கிரீன் ஆகும். இது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர் வீச்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. பால், தயிர், ஆப்பிள் சம அளவு கலந்து மசித்து முகத்தில், கையில் பேக் போட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவி வர வேண்டும். இது சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.