மகளிர் டி20 சேலஞ்ச்: முதல் போட்டியிலேயே த்ரில் வெற்றி

 

மகளிர் டி20 சேலஞ்ச்: முதல் போட்டியிலேயே த்ரில் வெற்றி

ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் இன்று முதல் சார்ஜாவில் துவங்கியது. இந்தத் தொடரின் முதலாவது ஆட்டத்தில் மிதாலிராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற வெலாசிட்டி அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.சூப்பர்நோவாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியா பூனியா மற்றும் சமாதி அத்தப்பட்டு ஆகியோர் களமிறங்கினர். பிரியா பூனியா 11 ரன்களிலும், அத்தப்பட்டு 44 ரன்களிலும். அதன்பின் வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.20 ஓவர் முடிவில் சூப்பர்நோவா அணி 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை குவித்தது.வெலாசிட்டி அனைத்து தரப்பில் இக்தா பிஸ்ட் 3 விக்கெட்டுகளையும்,காஸ்பிரக் மற்றும் அலாம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மகளிர் டி20 சேலஞ்ச்: முதல் போட்டியிலேயே த்ரில் வெற்றி

127 இன்றைய இலக்குடன் வெலாசிட்டி அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா மற்றும் வியட் இறங்கினர். வியட் ரன் ஏதும் எடுக்காமலும் ,ஷபாலி வர்மா 17 ரன்களிலும் கேப்டன் மிதாலி ராஜ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.அதன்பிறகு வந்த வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ரன்களிலும்,சுஷ்மா வர்மா 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.19.4 ஓவர் முடிவில் வெலாசிட்டி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்யசாத்தில் வெற்றி பெற்றது. சுன் லூஸ் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தது.