நெற்குன்றத்தில் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் ஆர்ப்பாட்டம்

நெற்குன்றத்தில் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை

சென்னை நெற்குன்றத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெற்குன்றத்தில் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை நெற்குன்றம் திருவள்ளூர் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்காக இன்று பூமி பூஜை நடைபெற்றது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சிறுவர்கள் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாதகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

நெற்குன்றத்தில் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து பேசிய அந்த பகுதி மக்கள், டாஸ்மாக் கடை அமையும் இடத்திற்கு அருகே அரசுப்பள்ளி இயங்கி வருவதாகவும், மேலும் கடை அமைக்கப்பட்டால் பெண்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர். குடும்பங்களை சீரழிக்கும் டாஸ்மாக் கடை தங்கள் பகுதிக்கு வேண்டாம் என தெரிவித்த அவர்கள், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு மதுக்கடை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.