• July
    22
    Monday

Main Area

இல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ!

 பிரசவத்துக்குப் பிறகு ஏற்பட்ட உடல் பருமனை, 10 ஆண்டுகள் கடந்த பிறகும் குறைக்க முடியாதது ஏன் என என்றேனும் நீங்கள் நினைத்து பார்த்தது உண்டா?

ஓரிடத்தில் நிற்காமல் பரபரவென நீங்கள் ஓடியாடி வேலை செய்யலாம், வீட்டில் எல்லோரையும் கவனித்துக் கொள்ளலாம், இருந்தபோதிலும் உங்களின் இடுப்பு மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்புச் சதை குறையவே குறையாது. அநேகமாக, உங்களின் சீரற்ற உணவுப்பழக்கத்துக்கு, ஓர் இடைவெளி விட இது தகுந்த நேரமாக இருக்கலாம். ஒரு பிசியான இல்லத்தரசிக்கு, எந்த பாதிப்பும் இன்றி, அவரது பிசியான வேலைநேரத்தை இடையூறு செய்யாமல், அதேசமயம், அவரது உடல் பருமனை குறைக்க, தனித்துவமான எடைக் குறைப்பு திட்டம் தேவை.

இல்லத்தரசி எனும் கயிற்றுமேல் நடக்கும் பொறுப்புக்கு இடையே, பழைய உடல் தோற்றத்தை மீட்டெடுக்க நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

1. சரியான காலை உணவு சாப்பிட வேண்டும்

fs

ஒரு நாளின் முக்கிய உணவு என்று காலை உணவைச் சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. அன்றைய நாளின் வேலைகளை செய்யத் தேவையான ஆற்றலை காலை உணவு உங்களுக்கு தருவதோடு, நாள் முழுக்க கலோரிகளை எரிக்கத் தேவையான அவகாசமும் கொடுக்கிறது. அதேசமயம், மதிய நேரத்தில் உங்களுக்கு பசி எடுக்காவிட்டாலும், ஏதேனும் ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் போதும். ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான இட்லி, தோசை அல்லது தானியச்சத்து நிறைந்த ரவை/கோதுமை உப்புமா, அவல் உப்புமா போன்றவற்றையே காலை நேரத்தில் சாப்பிட வேண்டும். காலத்தை கடந்து நிற்கும் இத்தகைய இந்திய உணவு வகைகள், உடலில் கொழுப்பு சேராமல், போதுமான ஆற்றல் தர வல்லவை.

2. சாப்பாட்டை புறக்கணிக்கக்கூடாது

ஒரு வேளை நன்கு சாப்பிட்டுவிட்டதால், அடுத்த வேளை சாப்பாடு தேவையில்லை என்று புறக்கணிப்பது சரியல்ல. ஏனெனில், திடீரென பசி ஏற்பட்டு, கலோரி நிறைந்த உணவை சாப்பிடும் நிலை ஏற்படும். மேலும், வழக்கமாகச் சாப்பிடுவதை விட, அதிக அளவு சாப்பிட நேரிடும். சீரான இடைவெளியில், 3 வேளையும் சாப்பிடுவதால், உடலின் வளர்சிதை மாற்றம் சீராகி, எடை குறைய உதவும். ஆயுர்வேத வழியில் வாழ்க்கையை வாழலாம் - ஒரு ஆரோக்கியமான உடலுக்கு, ஃபிரெஷ்ஷான மூலப்பொருட்கள் சேர்த்து எளிதாகச் சமைத்த உணவு வகைகள் மற்றும் ஒரு கோப்பை மோர் போதுமானது.

3. நிறைய நடக்கலாம்

ZdF

லிஃப்டிற்கு பதிலாக, படிக்கட்டுகளை பயன்படுத்த மறந்துவிடாதீர். ஷாப்பிங் போனால், வாகனத்தை ஒரு குறிப்பிட்ட தொலைவில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து நடந்து, கடைக்குள் போகலாம். ஒரு நீண்ட நாள் முடிந்ததும், மாலை நேரத்தில், வீட்டின் அருகே உள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்வது ரிலாக்ஸ் தருவதோடு, தொப்பை விழாமல் தடுக்கவும் உதவும்.

4. சோம்பல் பழக்கத்திற்கு இடம் தரக்கூடாது

உங்களின் கைக்குழந்தை பிற்பகலில் துயில் கொள்வதால், நீங்களும் கூட படுத்து உறங்கக்கூடாது. அந்த நேரத்தை தோட்ட வேலைகளுக்கு பயன்படுத்தலாம். இதேபோல, ஓரிடத்தில் அமர்ந்து உங்களின் தோழியுடன் ஃபோன் பேசாமல், நடந்துகொண்டே ஃபோனில் பேசுவது நல்லது. டிவி பார்த்தபடியே சாப்பிடுவதை புறக்கணியுங்கள். அப்படிச் செய்தால், உங்களுக்கே தெரியாமல், கூடுதல் நொறுக்குத்தீனிகளை சாப்பிட நேரிடும்.

5. போதிய உறக்கம் தேவை

sgdsfdfhh

உங்களின் குழந்தைகள் தூங்குவதைப் போல, நீங்களும் சராசரியாக 8 மணிநேரம் தூங்க வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான், உங்களின் மன அழுத்தம் குறைவாக இருக்கும், சோர்வின்றி வேலை செய்யலாம், ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். இரவில் போதிய அளவு தூங்காதவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

வாழ்க்கை முறையில் ஏற்படும் சிறு மாற்றம், ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும். படுக்கைக்கு அடியில் நீங்கள் நீண்ட காலமாக வைத்திருக்கும் எடை பார்க்கும் கருவியில் இந்த திருப்பம் எதிரொலிக்கும். தினந்தோறும் உடலுக்கு வேலை தருவது வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்தும். அதனால், துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, தரையை துடைப்பது போன்ற வேலைகளைச் செய்வதால், உங்களின் உடல் எடை குறையும். அப்புறம், இன்னும் எதற்காகக் காத்திருக்கீங்க?

Arunpandiyan Fri, 02/15/2019 - 17:02
womens health Health tips body slim beauty women லைப்ஸ்டைல் பெண்ணுலகம்

English Title

Health tips to homemaker's

News Order

0 
hairloss

பிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்

டெலோகன் எஃப்ளூவியம், இது எதோ பயங்கரமான பாதிப்பு போல தோன்றலாம், ஆனால், முதல் பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு ஏற்படும் இந்த அதீத முடி உதிர்வு, ஓராண்டு வரை நீடிக்கும்


bangle

பழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா?

சீமந்தம், கோவில், கல்யாணம், நவராத்திரிகளுக்கு கிஃப்டா வந்த வளையல் சில சமயத்தில் நம்ம கைக்கு சேராது. அதை தூக்கிபோடவும் மனசு வராம மூட்டைக்கட்டி வச்சிருப்போம்.


food

உங்க மகள் பூப்பெய்தி விட்டாளா? இந்த 10 உணவுகளை கண்டிப்பாக கொடுங்க... உடல் ஆரோக்கியமும் மூளைத் திறனும் அதிகரிக்கும்!

ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான்.


mustache

பெண்களுக்கு அரும்பு மீசை வருகிறதா? இதோ மறையச் செய்யும் அருமையான வைத்திய குறிப்பு 

உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக்கிறதா? வீட்டிலேயே இந்த முயற்சிகளை செய்து பாருங்கள்.


gas

உங்க சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சம் இருக்கு? ஈஸியா தெரிஞ்சுக்க ஒரு கப் தண்ணீர் போதும்

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு விறகு அடுப்பில் சமையல் நடக்கும். இப்போது எரிவாயு உருளை என சொல்லப்படும் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை.


pregnantwoman

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு எத்தனை கலோரிச் சத்துகள் தேவைப்படும்?

சாதாரண நிலையில் ஒரு பெண்ணுக்கு 2200 கலோரியும், கர்ப்பக் காலத்தில் 2500 கலோரி சத்தும், பாலுாட்டும் காலத்தில் 3000 கலோரியும் தேவைப்படும்


preganant lady

கர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை? எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன? இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்

கர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை?  எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன?  இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும் என்பதை பார்க்கலாம்


preganant lady

கர்ப்பிணிகள் வேறு எந்தவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்?

பால், பால் பொருள்கள் மற்றும் இனிப்பு வகைகளில் நிறைய கொழுப்பு இருப்பதால் எளிதில் உடல் பருமன் அடைய வாய்ப்பு உண்டு.  எனவே, மிகக் குறைந்த கலோரி மற்றும், கொழுப்பு குறைவான காய்கறிகள், பழ...



preganant lady

கர்ப்பிணிகளுக்கான சத்தான சிறப்பு உணவுகள்

கொழுகொழுவென்ற குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கர்ப்ப காலத்தின்போது சத்தான உணவுகளை சாப்பிடுவார்கள். ஆனால் அச்சமயத்தில் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சில சிறப்பு...



sex1

இந்த ஆசையெல்லாம் பெண்களால் அடக்க முடியாதாம்! தெரிஞ்சிக்கோங்க பாஸ்!

மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும்  உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது

2018 TopTamilNews. All rights reserved.