’மகளிர் குழுக்கான கடன்களின் தவனையை ஆகஸ்ட் 31 வரை வசூல் செய்யாதே’ பெண்கள கூட்டமைப்பு

 

’மகளிர் குழுக்கான கடன்களின் தவனையை ஆகஸ்ட் 31 வரை வசூல் செய்யாதே’ பெண்கள கூட்டமைப்பு

கொரோனா பேரிடர் நாட்டின் எல்லா மட்டத்திலும் தாக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, அன்றாடம் உழைத்து கூலி பெற்று வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு துயரம் அளிப்பதாக இருக்கிறது. இதில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் தமிழகத்தில் ஏராளமான பெண்கள் நுண்கடன்கள் பெற்றுள்ளனர். அவற்றைக் கட்டச் சொல்லி நிறுவனங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இதனை தடுக்க வேண்டும் என பெண்கள் கூட்டமைப்பு இன்று ஆன்லைன் போராட்டம் நடத்துகிறது.

’மகளிர் குழுக்கான கடன்களின் தவனையை ஆகஸ்ட் 31 வரை வசூல் செய்யாதே’ பெண்கள கூட்டமைப்பு

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஆகஸ்ட் 31 வரை கடனையும், வட்டியையும் வசூல் செய்யக்கூடாது என்று வழிகாட்டியுள்ளது. பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மீறும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இத்தகைய அறிவிப்பை அனைத்து பெண்கள் கூட்டமைப்பு வரவேற்கிறது.

பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி  #StopMicroFinanceHarassment என்ற hashtagஉடன் ஆன்லைன் போராட்டத்தை அனைத்து பெண்கள் கூட்டமைப்பு நடத்த இருக்கின்றது.

  1. கொரோனா காலகட்டத்தில், நுண்நிதி நிறுவனங்கள் கடன் தவணை வசூலிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 2021 வரை நீடித்திடு.
  2. கடன் தவணை செலுத்த விடுப்பு அளிக்கப்பட்ட காலத்திற்கான, சிறுகடன்களின் மீதான வட்டியை தள்ளுபடி செய்திடு.
  3. மாநில அரசே ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை மீறி, வசிப்பிடத்திற்கும், பணியிடத்திற்கும் ஆட்களை அனுப்பி, கடன் வசூல் செய்யும் நுண்நிதி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்திட உரிய நடவடிக்கை எடுத்திடு.

4.ரிசர்வ்வங்கியின் வழிகாட்டுதலை மீறி, கடன் வசூல் செய்யும் நுண்நிதி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க மாவட்டம் தோரும் சிறப்பு அதிகாரியை நியமித்திடு.

’மகளிர் குழுக்கான கடன்களின் தவனையை ஆகஸ்ட் 31 வரை வசூல் செய்யாதே’ பெண்கள கூட்டமைப்பு

  1. புற்றீசல் போல் பெருகியுள்ள நுண்நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த தனிச் சட்டத்தினை தமிழகத்தில் கொண்டு வந்திடு.
  2. நுண் நிதி நிறுவனங்கள் வழங்கும் சிறு கடன்கள் மீதான வட்டி விகிதத்தின் உச்ச வரம்பை 9% ஆக நியமித்திடு.
  3. சுய உதவிக் குழுக்களுக்கு, கொரோனா ஊரடங்கு காலத்திற்கான வட்டியில்லாக்கடன்களை பொதுத்துறை, கிராம மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கிடு.
  4. நுண்நிதி நிறுவனங்களின் கடன் வசூல் நிர்ப்பந்தங்களினால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்கிடு.