பெண்கள் கிரிக்கெட்டுக்கு மார்கெட்டிங், முதலீடுகள் தான் தேவை…விதிமுறை மாற்றங்கள் அல்ல – ஷிகா பாண்டே

 

பெண்கள் கிரிக்கெட்டுக்கு மார்கெட்டிங், முதலீடுகள் தான் தேவை…விதிமுறை மாற்றங்கள் அல்ல – ஷிகா பாண்டே

டெல்லி: பெண்கள் கிரிக்கெட்டுக்கு மார்கெட்டிங், முதலீடுகள் தான் தேவை, விதிமுறை மாற்றங்கள் அல்ல என ஷிகா பாண்டே கூறியுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே பெண்கள் கிரிக்கெட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை பதிவிட்டார். அதில் அவர் கூறுகையில் “ஒட்டுவேலைகள் பார்ப்பது, போட்டி பந்துகளின் அளவு மாற்றம், ஆடுகளங்களின் அளவுகள் மாற்றம், மைதானத்தின் அளவுகள் சுருக்கம் ஆகியவை பெண்கள் கிரிக்கெட்டிற்கு பலனளிக்காது.

அதற்கு பதிலாக பெண்கள் கிரிக்கெட்டை மார்கெட்டிங் செய்தல், புற்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துதல், அதிக முதலீடுகளை கொண்டு வருதல் ஆகியவையே பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவும்” என கூறினார். ஷிகா பாண்டே 104 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.