“மயக்க மருந்து ,பின்னர் பலருக்கு விருந்து” -தோழி வீட்டில் “டீ” குடித்ததால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை .

“மயக்க மருந்து ,பின்னர் பலருக்கு விருந்து” -தோழி வீட்டில் “டீ” குடித்ததால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை .

சமூக ஊடகத்தில் அறிமுகமான பெண்ணால் கடத்தப்பட்டு, பலருக்கு விற்கப்பட்டு பலாத்கார கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதையை கேட்டால் கண்ணீர் வரும் .

“மயக்க மருந்து ,பின்னர் பலருக்கு விருந்து” -தோழி வீட்டில் “டீ” குடித்ததால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை .

சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு 30 வயது பெண்ணுக்கு சமூக ஊடகத்தின் மூலம் சஜாடா என்ற பெண் தோழியாக அறிமுகமானார் .அதன் பின்னர் அந்த சஜாடா அந்த பெண்ணை  ஒருநாள் தன்னுடைய வீட்டிற்கு தேநீர் அருந்த அழைத்தார் .அவர்  கூப்ப்பிட்டதால் அந்த பெண் சஜாடாவின் வீட்டிற்கு தனது 10 வயது மகனுடன் சென்று  தேநீர் அருந்தினார் .

அவர் தேநீர் அருந்தியபின் அந்த பெண் சுயநினைவை இழந்தார்.அவர்  மயக்கம் தெளிந்து எழுந்தபோது , மேலும்  மூன்று பெண்களுடன் ஒரு காரில் இருப்பதையறிந்து அதிர்ச்சியடைந்தார் . அதன் பிறகு சஜாதா அந்தப் பெண்ணை தங்களுடன் வரவில்லையென்றால் மகனை கொலை செய்வதாக மிரட்டினார். அவர் பயந்து போய் அவரோடு வர சம்மதித்தார் .அதன் பின்னர் அந்த பெண் ராய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து ஒரு விமானத்தில் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் பிறகு டெல்லியில் இருந்து, அந்தப் பெண் ஹரியானாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் .

அந்தப் பெண்ணுடன் வந்த சுபம் திவாரி என்ற நபர், அவரின்  மகனை துப்பாக்கி முனையில் மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் . பின்னர் அந்த பெண்  சுரேஷ் என்பவருக்கு  ரூ .1 லட்சத்திற்கு விற்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண் ராஜேஷ் என்ற  மற்றொரு ஆணுக்கு ரூ .1.4 லட்சத்திற்கு விற்கப்பட்டார். அந்த பெண்  ராஜேஷிடம் தனக்கு நேர்ந்த  துன்பத்தை  விவரித்தார்.அவர் அந்த பெண்ணை சொந்த ஊருக்கு  திரும்ப  உதவினார். அந்த பெண் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி வந்ததும்,  போலீஸை அணுகி புகார் அளித்தார்.அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், சஜாதா உட்பட சல்மான் கான், ஜுனைத் காம், சுபம் திவாரி மற்றும் சஜாதா சயீத் ஆகிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தார்கள் .

“மயக்க மருந்து ,பின்னர் பலருக்கு விருந்து” -தோழி வீட்டில் “டீ” குடித்ததால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை .