“மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் கடன் தவணை செலுத்த கட்டாயப்படுத்த கூடாது”- காஞ்சிபுரம் ஆட்சியர்

 

“மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் கடன் தவணை செலுத்த கட்டாயப்படுத்த கூடாது”- காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம்

மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் கடனை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்த வேண்டாம் என நுண்நிதி நிறுவனங்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், கொரோனா தொற்று காலத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனுக்கான தவணை மற்றும் வட்டியை, சுய உதவி்க்குழுக்கள் திரும்ப செலுத்துவதற்கு நுண் கடன் வழங்கிய நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறினார்.

“மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் கடன் தவணை செலுத்த கட்டாயப்படுத்த கூடாது”- காஞ்சிபுரம் ஆட்சியர்

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவசர தேவைகளுக்கென தனியார் நிதி நிறுவனங்களில், மக்கள் கடன்பெறும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறிய ஆட்சியர், எனவே புதிதாக கடனுதவி தேவைப்படும் குழுக்களுக்கு கடன் வழங்கி வாழ்வாதாரம் மேம்பட உதவிடலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், அரசின் உத்தரவை மீறி கடன் மற்றும் வட்டி தொகையை திரும்ப செலுத்துவதற்கு சுய உதவிக்குழுக்களை கட்டாயப்படுத்தும் நிறுவனங்களின் விவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் 044 – 27236348, 93423 40815 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கூறினார்.