விவசாய பேரணிக்கு சென்ற பெண் -விவசாயி போல் வந்த இருவர் -அடுத்து பெண்ணுக்கு நடந்த கொடுமை

 

விவசாய பேரணிக்கு சென்ற பெண் -விவசாயி போல் வந்த இருவர் -அடுத்து பெண்ணுக்கு நடந்த கொடுமை

 விவசாய பேரணிக்கு சென்ற பெண்ணை இருவர் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

விவசாய பேரணிக்கு சென்ற பெண் -விவசாயி போல் வந்த இருவர் -அடுத்து பெண்ணுக்கு நடந்த கொடுமை

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு 25 வயதான பெண்,விவசாயிகள் இயக்கத்தின் ஆதரவாளர் . அவர் சில  ஆண்களுடன்  திக்ரி எல்லையில் நடந்த  விவசாயிகளின்  விவசாய போராட்டத்திற்கு செல்ல முடிவு செய்தார்

அதன் படி அவர் ஏப்ரல் 10 ம் தேதி ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள திக்ரி எல்லைக்கு மேற்கு வங்கத்திலிருந்து புறப்பட்டார் .அப்போது அவரோடு வந்த இரு நபர்களால் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்ட்டதாக அந்த பெண்ணின் தந்தை பொலிசில்  புகார் கூறினார்

இதற்கிடையில்,இந்த  குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஹரியானா காவல்துறை ஒரு எஸ்ஐடியை உருவாக்கியுள்ளது.  விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு அமைப்பின் உறுப்பினர்களுடன் ஆர்ப்பாட்ட இடத்திற்கு அந்த பெண் சென்றபோது, ​​சில ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த பெண்ணின்   தந்தை குற்றம் சாட்டியதை அடுத்து இந்த எஸ்ஐடி உருவாக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த பெண்ணுக்கு ஏப்ரல் 25 ம் தேதியன்று உடல்நிலை சரியில்லாமல் போனது .அதனால் அவர்  ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . .அப்போது அவருக்கு கொரானா போன்ற அறிகுறிகள் இருந்ததால், சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி அவர் ஏப்ரல் 30 அன்று இறந்தார் .இப்போது போலீசார் இந்த வழக்கு பற்றி வந்த குற்றவாளிகள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .