மகனைக் கொன்ற கள்ளக் காதலனை காத்திருந்து பழிவாங்கிய தாய்: திடுக்கிட வைக்கும் உண்மைகள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainமகனைக் கொன்ற கள்ளக் காதலனை காத்திருந்து பழிவாங்கிய தாய்: திடுக்கிட வைக்கும் உண்மைகள்!

murder
murder

சென்னை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வெளிவந்த நபரை சிறுவனின் தாய் கொலை செய்த விவகாரத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் - மஞ்சுளா தம்பதியின் மகன் ரித்தேஷ் சாய். ரித்தேஷின் தாய் மஞ்சுளாவிற்கும், இவர்களின் குடும்ப நண்பரான நாகராஜ் என்பவருக்கும் தகதா உறவு இருந்துள்ளது. இதை எப்படியோ அறிந்துகொண்ட சிறுவன் ரித்தேஷ், தாயின் லீலைகள் குறித்து தந்தை கார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார். 

manjula

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், மஞ்சுளாவையும், நாகராஜையும் கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால், தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்படுத்திய சிறுவன் ரித்தேஷ் மீது கோபம் கொண்ட நாகராஜ், சிறுவனை கடத்தி தாம்பரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து கொலை செய்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகராஜ், சில தினங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின் தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்ற நாகராஜ் அங்குள்ள ஒரு செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலைக்கு சேர்ந்தார். அந்த கடைக்கு முன்பு வைத்தே கடந்த 30-ம் தேதி நாகராஜ் படுகொலை செய்யப்பட்டார். 

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், நாகராஜை கொலை செய்தது யார்? சென்னை கொலை வழக்கில் தொடர்புள்ளவர்களா? அல்லது கூலிப்படையினரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

nagaraj murder

இதில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, ஆசை வார்த்தைகள் பேசி தன்னை மயக்கியது மட்டுமல்லாமல் தன் மகனையும் கொலை செய்த நாகராஜ் மீது மஞ்சுளா கடும் கோபத்தில் இருந்துள்ளார். பெயரைக் கெடுத்து, கணவரையும் தன்னிடம் இருந்து பிரித்த நாகராஜை கொலை செய்வதென முடிவு செய்த மஞ்சுளா, 9 மாதங்களாக நாகராஜ் எப்போது வெளியே வருவார் என காத்திருந்தார். 

அதன்பின் நாகராஜ் திடீரென ஜாமீனில் வெளி வந்திருக்கும் செய்தியை அறிந்து, கூலிப்படையுடன் திருவண்ணாமலை சென்ற மஞ்சுளா, நாகராஜை கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்து தன் ஆத்திரத்தைத் தீர்த்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.