தாடி, முறுக்கு மீசை உள்ள ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும்!

 

தாடி, முறுக்கு மீசை உள்ள ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும்!

தாடி… இளமைக்காலத்து ஆண்களின் அடையாளங்களுள் ஒன்று. இன்றைய பெண்களில் பலருக்கு மெல்லிய தாடியும், முறுக்கிய மீசையும் வைத்திருக்கும் ஆண்களையே அதிகம் பிடித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்லூரிப் பெண்களில் பலருக்கு மீசையும் தாடியும் வைத்த ஆண்களைத்தான் பிடித்திருக்கிறதாம்.

தாடி, முறுக்கு மீசை உள்ள ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும்!
கவிதை…
தாடி குறித்த சில கவிதைகளைப் பார்ப்போம். `நீ முத்தமிடாத என் கன்னத்தில் முள்வேலி போன்று வளர்க்கிறேன் நீண்ட தாடியை..!’ – `என் கன்னங்களில் உன் தாடி மயிர் குத்தும்போதெல்லாம் நான் வெட்கித் தலைகுனிகிறேன். முட்களைப் போன்று தெரிந்தாலும் – எனக்கு பஞ்சணை போலிருக்கிறது’. அற்புதமான கவிஞர்களின் படைப்புகள் இவை.

திரைப்படங்களில் போலீஸ் அதிகாரிகளாக வலம் வரும் பலர் மீசையை முறுக்கிவிட்டபடி வருவார்கள். அதேபோல், வில்லன்களில் சிலர் தாடி வைத்தபடி வலம் வருவார்கள். சினிமாவைப் பார்த்து மயங்கும் பெண்களில் சிலர் இப்படி மீசையும் தாடியும் வைத்திருக்கும் ஆண்களையே அதிகம் விரும்புகிறார்கள். சிலர் தாடி, மீசை வைத்தவர்களையே விரும்பி திருமணம் செய்கிறார்கள்.

தாடி, முறுக்கு மீசை உள்ள ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும்!ரெட்டை ஜடை…
கருகருவென நீண்ட கூந்தலும், ரெட்டை ஜடையும் உள்ள பெண்களே அழகு என ஆண்கள் கருதுகிறார்கள். அதுபோல ஆண்களுக்கு முறுக்கு மீசை, கருந்தாடிதான் அழகு என்கிறார்கள். இவை அழகுக்கு அழகு சேர்ப்பதுடன் கம்பீரத்தைத் தரும். பெண்களின் விருப்பமறிந்த ஆண்களில் பலர் முறுக்கு மீசை, தாடியுடன் புல்லட்டில் வலம் வருகிறார்கள்.

நூறு ஆண்கள் கூடியிருக்கும் இடத்தில் தாடி,மீசை வைத்திருக்கும் ஆண் மட்டும் தனித்துவமாகத் தெரிவான். மற்றவர்களின் முகங்களைவிட தாடிக்கார, மீசைக்கார ஆண்களின் முகம் மிக எளிதாகப் பதிந்துவிடும். இந்த ரகசியங்கள் தெரிந்ததால்தானோ என்னவோ பல ஆண்கள் மீசையை முறுக்கிவிட்டு தாடியை ட்ரிம் பண்ணிக்கொண்டு வலம் வருகிறார்கள்.

தாடி, முறுக்கு மீசை உள்ள ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும்!தாடியை வருடி…
செல்லமாக சிணுங்கியபடி ஆண்களின் தாடிகளை வருடிக் கொடுக்கும் பெண்களில் சிலரை சினிமாக்களில் காட்டுவார்கள். இன்றைக்கு பூங்காக்காளிலும், கடற்கரைகளிலும் ஒட்டி உறவாடும் காதல் ஜோடிகளில் பலர் இதுபோன்ற திரைப்படக் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தாடி, மீசை வளர்ப்பதால் ஆண்களுக்கு உடல்ரீதியாக சில நன்மைகள் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. சூரியனிலிருந்து வெளிவரும் 95 சதவீத புறஊதாக கதிர்கள் முகத்தில் படாமல் தடுக்கப்படுகிறது. இதனால் சருமம் கறுப்பாவது தடுக்கப்படுவதுடன் எளிதில் முதிர்ச்சியடையாது. தாடி இல்லாதவர்களைவிட தாடி வைத்திருப்பவர்களின் சருமம் இளமையாக இருக்க இதுவே காரணம்.

நலம் தரும் தாடி…
அடர்த்தியான தாடி ஒவ்வாமையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்று தொண்டை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். இத்தகவலை அடிசன் பி.டச்சேர் என்ற மருத்துவர் தனது ஆய்வுப் புத்தகத்தில் கூறியுள்ளார். முகத்தில் வளரும் முடிகள் நுரையீரலைப் பாதுகாக்க இயற்கையாக ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆகவே, ஆண்களே பெண்கள் திரும்பிப் பார்க்கிறார்களோ இல்லையோ உங்கள் ஆரோக்கியத்துக்காகவாவது தாடி வளருங்கள். கூடவே முறுக்கு மீசையை வளர்த்து அதில் கொஞ்சம் எண்ணெய் தடவி விடுங்கள். கருகருவென செழித்து வளரும்.