• April
    03
    Friday

Main Area

Main



பெண்ணைக் கடத்தி வைத்து சித்ரவதை... டாஸ்மாக்கில் கைதான குற்றவாளிகள்

குற்றவாளி
குற்றவாளி

சென்னை நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றச் செயல்கள் கைதாகும் நபர்களில் பெரும்பாலும் சிறுவர்களும், இளைஞர்களுமாகவே இருக்கிறார்கள். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் திலகவேணி. இவர் அதே பகுதியை சேர்ந்த சகாயராணி என்பவரிடம் 50 லட்சத்துக்கு வீட்டு மனை  ஒன்றினை வாங்கினார். நிலம் வாங்கும் பொழுது 40 லட்சம் பணத்தைக் கொடுத்து நிலத்தை கிரையம் செய்துக் கொண்டார். மீதத் தொகையான 10 லட்சத்தை கடந்த இரண்டு வருடங்களாக நிலத்தை விற்றவருக்கு தராமல் அலைகழித்து வந்துள்ளார்.

women

இந்நிலையில், சகாயராணியின் கணவர் அந்தோணிதாஸ் என்பவர் 9 பேருடன் நிலம் வாங்கிய  திலகவேணியை காரில் கடத்திச் சென்று, நீலாங்கரை விஜிபி அருகே வாடகைக்கு அறை எடுத்து, அங்கே அடைத்து வைத்து பாக்கி பணம் கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய திலகவேணி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
திலகவேணியின் புகாரை வழக்காக பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  இரவு கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் அந்தோணிதாசின் கூட்டாளிகள் இருப்பதாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

arrested

சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற போலீசார், திரிசூலம் பகுதியை சேர்ந்த ஜகன் (31), மனோஜ் (33), சரத் (25), அருண் (29), மணி (26) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேரை தேடி வருகின்றனர். கைதான குற்றவாளிகள் 30,35 வயதுக்குட்பட்டவர்கள் என்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நிறைய இளைஞர்கள் தவறான பாதையில் பயணித்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் தங்களது வருத்தத்தைத் தெரிவித்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.