6,300 அடி மரண பள்ளத்தாக்கின் விளிம்பில் தூரி ஆடிய பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

 

6,300 அடி மரண பள்ளத்தாக்கின் விளிம்பில் தூரி ஆடிய பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

ரஷ்ய குடியரசான தாகெஸ்தானில் அமைந்துள்ளது சுலக் பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கு 6,300 அடி உயரம் கொண்டது. சுற்றுலாதலமாக விளங்கும் இங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் வருகை புரிவார்கள். இங்கு உயிருக்கு ஆபத்தான த்ரில்லிங் ஊஞ்சல் சவாரி பிரபலமானது. அதாவது பள்ளத்தாக்கின் விளிம்பில் ஊஞ்சல் கட்டியிருப்பார்கள். நெஞ்சில் துணிவிருப்பவர்கள் இந்த ஊஞ்சலில் ஆடலாம். பணியாளர் ஒருவர் ஊஞ்சலை கொஞ்சம் கொஞ்சமாக வேகப்படுத்தி தள்ளிவிடுவார்.

6,300 அடி மரண பள்ளத்தாக்கின் விளிம்பில் தூரி ஆடிய பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

இங்கே தான் அந்த அதிர்ச்சிக்கரமான சம்பவம் அரங்கேறியது. இங்கு சுற்றுலா வந்த இரு பெண்கள் இந்த ஊஞ்சலில் ஆட முன்வந்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் ஊஞ்சலில் அமர பணியாளர் ஒருவர் ஊஞ்சலை தள்ளிவிட ஆரம்பித்தார். சிறிது சிறிதாக வேகப்படுத்திக்கொண்டே சென்றார். அவர்களும் ஆரம்பத்தில் இந்த ஊஞ்சல் சவாரியில் மிக மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். அப்போது யாரும் எதிர்பாரா விதமாக ஊஞ்சலின் வேகமாக காரணமாக அது கட்டப்பட்டிருந்த செயின் அறுந்து விழுந்தது.

ஊஞ்சல் வேகமாக அசைந்ததால் அந்தப் பெண்களால் கீழிறங்க நொடிப்பொழுது கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் இருவரும் பள்ளத்தாக்கில் நிலை தடுமாறி விழுந்தனர். நல்வாய்ப்பாக ஊஞ்சல் ரொம்ப தூரம் சென்று அறுந்துவிழாமல் குறைவான உயரத்திலேயே விழுந்ததால் அவர்கள் உயிர் பிழைத்தனர். பலத்த காயங்கள் ஏற்படாவிட்டாலும் சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஊஞ்சல் பாதுகாப்பு தரத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்பதால் விபத்து நடந்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுலா துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.