ராஜீவ்காந்தி மருத்துவமனையில்… 8ஆவது மாடியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

 

ராஜீவ்காந்தி மருத்துவமனையில்… 8ஆவது மாடியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த மவுலி(48) என்பவர் தனது மனைவி சுமிதா(41)வை கடந்த மே 21-ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார். மூன்றாவது மாடியில் சுமிதா கொரோனா சிகிச்சை பெற்று வந்தார். மறுநாள் இரவு, சுமிதாவை காணாததால் அதிர்ச்சி அடைந்த மவுலி மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்துள்ளார். அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில்… 8ஆவது மாடியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

ஒரு வாரம் ஆகியும் அவரது மனைவி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த மே 31ம் தேதி பூக்கடை காவல் நிலையத்தில் மவுலி புகார் அளித்தார். இந்த நிலையில், சுமிதாவின் சடலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் எட்டாவது மாடியில் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. மூன்றாவது மாடியில் அனுமதிக்கப்பட்ட சுமிதா எட்டாவது மாடிக்கு எப்படி சென்றார்? எப்படி உயிரிழந்தார்? என அடுக்கடுக்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விகள் எவற்றுக்கும் பதில் இல்லை.

சுமிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் சுமிதாவின் மரணம் நோயின் தாக்கத்தால் உண்டானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுமிதா தானாக 8ஆவது மாடிக்கு சென்ற போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் அதை மருத்துவமனை நிர்வாகம் கவனிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கு உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.