திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை அடைத்து வைத்த கொடுமை செய்த கொடூரம்!

அதே நிறுவனத்தில் பணிபுரியும் அமெண்டா, சாண்டி ஆகியோர் அடித்தும், உணவு தராமலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

சென்னை தி.நகர் நியூ கிரி சாலையில் wgm பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருபவர் ஜோ. இவர் மேட்ரிமோனியின் மூலம் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

Rep Image

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நித்யாவிடம் தொலைபேசியில் பேசி பழகிய ஜோ, அவரை தனது அலுவலகத்தில் பணிபுரிய அழைப்பு விடுத்துள்ளார். இதனால் சென்னைக்கு கிளம்பி வந்த அந்த பெண் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜோ கம்பெனியில் பணிபுரிந்து அங்கேயே தங்கி வந்துள்ளார். இதையடுத்து நிறுவனம் திடீரென நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் பெங்களூர் காதலியிடம் உன் வீட்டில் 96 லட்சம் பணம் வாங்கிக்கொடு என மிரட்டி வந்துள்ளார் ஜோ.

Rep Image

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் 6 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே அலுலகத்தை விட்டு செல்ல முடியும் என்று நித்யாவை அடைத்துவைத்து அதே நிறுவனத்தில் பணிபுரியும் அமெண்டா, சாண்டி ஆகியோர் அடித்தும், உணவு தராமலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

கைது

இதுகுறித்து பெங்களூர் பெண்ணின் தந்தை சென்னையில் உள்ள உறவினரிடம் இதுகுறித்து சொல்ல அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை தேனாம்பேட்டை போலீசார் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...