• April
    02
    Thursday

Main Area

Main



ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

army women
army women

ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராணுவத்தில் பெண்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பணிவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு குறித்து கடந்த 2010ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பெண் அதிகாரிகளுக்கு ராணுவத்தில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு, அவர்களது உடல் அமைப்புகள், சமூகத்தின் பார்வை, குடும்ப கடமைகள் போன்ற காரணங்களை மத்திய அரசு முன்வைப்பது கவலையளிப்பதாக தெரிவித்தது.

army women

மேலும் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியது. ராணுவத்தில் பெண்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியது. மேலும் ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்  உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.