பயோமெட்ரிக்கில் கைரேகைகள் பதிவாகாததால் ரேஷன் கடை ஊழியர்களுடன் பெண்கள் வாக்குவாதம்

ஈரோடு மாவட்டத்தில் 1132 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் இன்று முதல் தொடங்கப்பட்டது. பயோமெட்ரிக் முறையில் கைரேகைகள் பதிவு செய்தவுடன் அந்த நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும். இதற்காக நேற்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பயோமெட்ரிக் கருவியை வழங்கினார்.

பயோமெட்ரிக்கில் கைரேகைகள் பதிவாகாததால்  ரேஷன் கடை ஊழியர்களுடன் பெண்கள் வாக்குவாதம்

அதையடுத்து இன்று முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை மூலம் பொருட்களின் வினியோகம் தொடங்கப்பட்டது. ஈரோடு மரப்பாலம் கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இன்று சீமெண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ரேஷன் கடை முன்பு திரண்டனர்.

பயோமெட்ரிக் முறையில் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அதில் பெரும்பாலானவர்களின் கைரேகைகள் பயோமெட்ரிக் கருவியில் பதிவாகவில்லை. இதனால் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் ஆத்திரமடைந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பயோமெட்ரிக்கில் கைரேகைகள் பதிவாகாததால்  ரேஷன் கடை ஊழியர்களுடன் பெண்கள் வாக்குவாதம்

பயோமெட்ரிக் முறையில் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அதில் பெரும்பாலானவர்களின் கைரேகைகள் பயோமெட்ரிக் கருவியில் பதிவாகவில்லை. இதனால் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் ஆத்திரமடைந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.மேலும் ரேஷன் கடை ஊழியர்களிடம் பயோமெட்ரிக்கில் ஏற்பட்டிருக்கும் பழுதை சரி செய்து மீண்டும் புதிய பயோமெட்ரிக் கருவியை கொண்டு வர அறிவுறுத்தினர்.

பயோமெட்ரிக்கில் கைரேகைகள் பதிவாகாததால்  ரேஷன் கடை ஊழியர்களுடன் பெண்கள் வாக்குவாதம்

இதையடுத்து ஊழியர்கள் புதிய கருவியை எடுத்து வரச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.