கார் ஓட்டும் வேலைக்கு வந்த ஒரு ட்ரைவர், அந்த ஓனரின் மனைவியை கடத்தி கல்யாணம் செய்து கொள்ள முயன்றதால் கைது செய்யப்பட்டார்
![Woman kidnapped by her driver in Pune [Representative image]](https://imgk.timesnownews.com/story/iStock-834512174_1.jpg?tr=w-600,h-450,fo-auto)
மஹராஷ்டிர மாநிலம் புனேவில் வசிக்கும் 25 வயதான தீபக் ஜாதவ் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார் .அதே ஊரில் வசிக்கும் கரிஷ்மா என்ற 34 வயதான பெண்ணும் அவரது கணவரும் தங்களின் ஐடி வேலைகளை விட்டுவிட்டு , அவர்கள் சொந்தமாக ஒரு தொழிலை தொடங்கினர் .பிறகு அவர்கள் ஒரு கார் வாங்கினார்கள் .அந்த காருக்கு அந்த ஊரிலிருந்த தீபக் ஜாதவை டிரைவராக வேலைக்கு அமர்த்தினர் .
அதன் பிறகு அந்த ஜாதவ் தினமும் அந்த பெண் கரிஷ்மாவை அவர்களின் காரில் அவரின் ஆபீஸிற்கு அழைத்து செல்வார் .இதனால் அவரை நம்பி ,அவரும் தினமும் அந்த காரில் தனியே சென்று வந்துள்ளார் .இதற்கிடையே அந்த ட்ரைவர் ஜாதவிற்கு குறுக்கு வழியில் பணக்காரனாகும் ஆசை வந்துள்ளது .அதன் படி தன்னுடைய எஜமானி கரிஷ்மாவை கல்யாணம் செய்து கொண்டுவிட்டால் தான் அவருக்கு கணவராகி ,பிறகு அவரின் சொத்துக்கும் அதிபதியாகலாம் என்று திட்டம் போட்டார் .
அதனால் கடந்த வாரம் அந்த கரிஷாமாவை காரில் அழைத்து செல்ல வந்த அவர் அவரை அங்கிருந்து அவுரங்கபாத்திற்கு கடத்தி சென்று ,ஒரு ரூமில் அடைத்து வைத்து தன்னை கல்யாணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தினார் .அதன்பிறகு அந்த கரிஷிமாவின் கணவர் மனைவியையே காணவில்லை என்று போலீசில் புகார் கூறினார் .பின்னர் அவரின் ஆசைக்கு சம்மதிக்காத கரிஷ்மா அவரிடமிருந்து 14 நாட்களுக்கு பிறகு தப்பிவந்து போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த ட்ரைவர் ஜாதவை கைது செய்தார்கள்
