• February
    17
    Monday

Main Area

Main



தொடர்பில் இருந்த மாமாவால் கெடுக்கப்பட்டு தொடர்பு எல்லைக்கு வெளியே போன பெண் -பலாத்காரத்திற்கு பின் "தீ"க்கு பலியிடப்பட்ட பரிதாபம் ...

மாதிரி படம்
மாதிரி படம்

டிசம்பர் 14 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள உபிபூர் கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்  வியாழக்கிழமை காலை  கான்பூரில் உள்ள லால் லஜ்பத் ராய் மருத்துவமனையில்  சிகிச்சையின் போது இறந்தார். 

அவளை பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்துக் கொன்றதாக அவரின்  'மாமா' ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட 18 வயது  பெண், 90 சதவீதம் தீக்காயங்களுடன் , சனிக்கிழமை மாலை கான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்து . பல உறுப்பு செயலிழப்பு காரணமாக அவர் இறந்தார்.

rape

பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை தனியாக வீட்டில் இருந்தபோது மாமா வந்து பாலியல் பலாத்காரம் செய்தார். அவள் எதிர்க்க முயன்றபோது, அவன் அவள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தான். அந்த இளம் பெண் வீட்டை விட்டு தீப்பிழம்பாக ஓடிவந்தாள், அண்டை அயலார்கள்  தீப்பிழம்புகளை அணைத்து   போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தூரத்து  மாமா, சுமார் 25 வயதுடையவர்  என்று பாதிக்கப்பட்டவரின் தந்தை கூறினார். பாதிக்கப்பட்டவரின் சகோதரர் சமர்ப்பித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது..
. பாதிக்கப்பட்ட பெண், , "தன்னுடைய  'மாமா'    தன்னை பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்".

rape

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 'மாமா'வுடன் தொடர்பில் இருந்ததாக  மாவட்ட நீதிபதி  சஞ்சீவ் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக "சனிக்கிழமையன்று ஒரு பஞ்சாயத்து கூட்டப்பட்டதாகவும் , பஞ்சாயத்து உறுப்பினர்கள் தம்பதியினரை அவரவர்  தனி வழிகளில் செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகவும், பெண்ணின்  பெற்றோர் மற்றும் 'மாமா' முன்னிலையில் மாமா கிராமத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக மாவட்ட நீதிபதி  கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.