kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


வாட்டர் ஹீட்டரால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!  நெஞ்சை உலுக்கியெடுக்கும் சம்பவம்!

வாட்டர் ஹீட்டர்
வாட்டர் ஹீட்டர்
Loading...

குளிர் காலங்களில் தண்ணீரை சூடு செய்வதற்காக இன்று பெரும்பாலான வீடுகளில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவ்வாறு வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் போது, நாம் வாங்கும் வாட்டர் ஹீட்டர்கள் தரமானது தானா, அதன் கூடவே கொடுக்கப்படுகிற பயன்படுத்துவதற்கான முறைகளை அடங்கிய குறிப்புகள் போன்றவற்றை எல்லாம் யாரும் பொருட்படுத்துவதே இல்லை.

women

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சின்ன பொண்ணு. கணவருடன் சந்தோஷமாக சென்றுக் கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் விதி வாட்டர் ஹீட்டர் ரூபத்தில் விளையாடியது. காலையில் குளிப்பதற்காக வாளியில் தண்ணீரை நிரப்பி விட்டு, அதற்குள் வாட்டர் ஹீட்டர் சாதனத்தை பொருத்தியுள்ளார். சிறிது நேரம் கழித்து, தண்ணீர் சூடானதும் குளிப்பதற்காக பாத்ரூமிற்குள் சென்ற சின்ன பொண்ணு ஞாபக மறதியிலும், அவசரத்திலும் ஸ்விட்சை அணைப்பதற்கு மறந்தபடியே, பக்கெட்டில் இருந்த தண்ணீரை குளிப்பதற்காக எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் சின்ன பொண்ணு பாத்ரூமிற்குள்ளேயே மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டுள்ளார். குளிக்கச் சென்றிருந்த மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஏதோ விபரீதம் என்று உணர்ந்த கணவர், பதறியடித்து பாத்ரூம்  கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, சின்ன பொண்ணு மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். 

died

மனைவியை பார்த்து துடித்து போன கணவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சின்ன பொண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இவையெல்லாமே அடுத்தடுத்த 15 நிமிஷத்தில் நடந்த கொடுமைகள். இதனிடையே வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதில் ஏற்பட்ட கவனக்குறைவால் பெண் ஒருவரின் உயிர் பரிதாபமாக பறிபோன சம்பவம் ஓமலூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
நம்முடைய பணத்தைக் கொடுத்து வாங்கும் வாட்டர் ஹீட்டர்கள் தரமானதா, ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா, அதை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதை எல்லாம் பார்த்து வாங்க வேண்டும். மேலும் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற வாட்டர் ஹீட்டர்களை வாங்க வேண்டாம் என்கிறார்கள் 

2018 TopTamilNews. All rights reserved.