• February
    19
    Wednesday

Main Area

Main



குழந்தையின் அழுகுரல் கேட்டு கோமாவிலிருந்து மீண்ட பெண்... மகிழ்ச்சியில் கணவர்!

பெத்தனா
பெத்தனா

கேரள மாநிலம்  மாவட்டம், வழூவூரைச் சேர்ந்தவர்  அனூப். இவரது மனைவி பெத்தனா.  இந்த தம்பதிக்கு ஆண்  குழந்தை ஒன்று இருந்த நிலையில்  கடந்த ஆண்டு மீண்டும் பெத்தனா கர்ப்பம்  தரித்துள்ளார். அப்போது எதிர்பாராத  விதமாக பெத்தனா  பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் அவர் கோமாவுக்கு சென்றுள்ளார். ஆனால்  சிசுவுக்கு ஏதும் ஆகவில்லை. பெத்தனாவை  காப்பாற்றவே முடியாது என்று மருத்துவர்கள் கைவிரிக்க நம்பிக்கையுடன் அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் அன்றிலிருந்து இன்றுவரை  பெத்தனாவை  அவரது  கணவர் கண்ணும் கருத்துமாக பார்த்து வந்துள்ளார். 

TTN

இந்நிலையில் பெத்தனா கர்ப்பம் தரித்து பத்தாவது மாதம் என்பதால் அவரை  பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து கடந்த 14-ம் தேதி மீண்டும் பெத்தனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு எல்வின் என்று பெயர் வைத்துள்ளனர். இத்தனை நாட்கள் கோமாவில் இருந்த பெத்தனாவின் முகத்தில் தற்போது  பல உணர்ச்சிகள் தென்படத் தொடங்கின. குழந்தையின்  சிரிப்பு, அழுகைக்கு ஏற்ப அவரும் தனது உணர்ச்சியை வெளிப்படுத்துகிறாராம். படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது எழுந்து உட்காரும் நிலைக்கு கொண்டுவந்துள்ளனர் அவரது கணவரும், குடும்பத்தினரும். மிகவிரைவில் பெத்தனா முழுமையாக குணமடைவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  

TTN

இதுகுறித்து கூறும் அவரது கணவர், பெத்தனாவுக்குப் பழைய நினைவு திரும்பியிருக்கிறது. எந்தக் கணவனுக்கும் மனைவி அழுதால் மகிழ்ச்சியாக இருக்காது. ஆனால், என் மனைவி அழுதபோது நான் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தேன்' என்று  நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். 

2018 TopTamilNews. All rights reserved.