• February
    25
    Tuesday

Main Area

Main



விமான எஞ்சின் மீது நாணயங்களை வீசிய பெண்! கோடிக்கணக்கான ரூபாய் சேதமும், பல உயிர்களும் காப்பாற்றப்பட்டது!

விமான எஞ்சின்
விமான எஞ்சின்

உலகின் ஒரு பக்கம் விஞ்ஞானம் வளர்ந்து வருகின்ற நிலையில், உலகின் இன்னொரு பக்கம் இன்று வரையிலும் மூட நம்பிக்கைகளும் மக்களிடையே இருந்துக் கொண்டிருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு எல்லா துறைகளிலுமே, தங்களது நாட்டின் தயாரிப்புகளை  சந்தைப்படுத்தி வரும் சீனாவின் நான்சங் எனும் ஊரைச் சேர்ந்தவர் வாங். இத்தனைக்கும் 23 வயதாகும் இந்த பெண்மணி மருத்துவ படிப்பை சீனாவில் படித்து முடித்திருக்கிறார். சீன நாட்டில் இருக்கும் கோவில்களின் மணி,  பூங்கா, சிலைகள் உள்ளிட்ட பொருட்களின் மீது நாணயங்களை வீசி எறியும் மூடபழக்கம் இன்று வரையில் சீன மக்களிடையே இருந்து வருகிறது.

engine

இவ்வாறு நாணயங்களை இந்த பொருட்களின் மீது வீசி எறிந்தால், அந்த நாணயங்கள் பொருட்களின் மீது படும் போது, நம்மிடையே இருக்கும் தீய சக்திகளையும், நோயையும் விரட்டியடித்து விட்டு, நமக்கு நன்மை தரும் என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், வாங் தனது  சொந்த ஊரான நான்சங்கீல்  இருந்து சின்ஜிங்கிற்கு ஸிச்சுவான் எனும் விமான நிறுவனம் மூலம் பயணித்து வந்தார். சின்ஜிங் விமான நிலையத்தில் இருந்து இறங்கியவுடன், தான் பயணித்து வந்த விமானத்தின் எஞ்சினைப் பார்த்து 3 நாணயங்களை அதன் மீது வீசி எறிந்தார் வாங்.
உடனடியாக விமான நிலையத்தில் இருந்த காவலர்கள் வாங்கைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். காவலர்கள் நடத்திய விசாரணையில்,  தனது சகோதரியின் மகன் நலம் பெற வேண்டும் என்பதற்காக அவ்வாறு நாணயங்களை வீசியதாக வாங் கூறியுள்ளார். மேலும் இது சட்டவிரோதம் என்று எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். உடனே அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நாணயங்களை விமான நிலைய காவலர்கள் பார்க்காமல் விட்டு இருந்தால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், பலரது உயிரும் பறிபோய் இருக்கும் என்று என்று அதிகாரிகள் அந்த பெண்ணை எச்சரித்துள்ளார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.