ஆட்டோ கேட்ட பெண் -ஆட்டைய போட்ட வாலிபர்கள் -கோவாவில் கும்மாளம் அடித்த கூட்டம்

 

ஆட்டோ கேட்ட பெண் -ஆட்டைய போட்ட வாலிபர்கள் -கோவாவில் கும்மாளம் அடித்த  கூட்டம்


ஒரு பெண்ணின் டெபிட் கார்டை திருடி அதன் மூலம் 3 .10 லட்ச ரூபாய் பணம் செலவு செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர் .

ஆட்டோ கேட்ட பெண் -ஆட்டைய போட்ட வாலிபர்கள் -கோவாவில் கும்மாளம் அடித்த  கூட்டம்


ஹைதராபாத்தின் அமீர் பேட்டையில் வசிக்கும் சீனிவாசுலு மற்றும் உதய் மனீஷ் ஆகியோர் ஒரே ஹாஸ்டலில் வசித்து வந்தார்கள் .இருவருக்கும் வேலை வெட்டி இல்லாததால் வேலை தேடிக்கொண்டிருந்தனர் .இந்நிலையில் அவர்களுக்கு தெரிந்த ஒரு பெண் அவர்களிடம் வந்து தன்னுடைய நாயை வெளியே கூட்டி செல்ல ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து தருமாறு கேட்டார் .அப்போது அவர்கள் அந்த பெண்ணிடம் ஆட்டோவுக்கு 500 ரூபாய் கேட்கிறார்கள் அதனால் தங்களின் டெபிட் கார்டு விவரங்களை கொடுத்தால் அதன் மூலம் பணம் கட்டி ஆட்டோவை புக் செய்கிறோம் என்று கூறினர் .
அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவர்களிடம் தன்னுடைய டெபிட் கார்டு விவரங்களை கொடுத்தார் .அப்போது அந்த நபர்கள் அந்த பெண்ணின் டெபிட் கார்டை ரகசியமாக எடுத்துக்கொண்டார்கள் .பின்னர் இருவரும் அந்த கார்டை எடுத்துக்கொண்டு கோவா சென்றார்கள் .அங்கு அவர்கள் உல்லாசமாக இருக்க அந்த கார்டு மூலம் செலவழித்தார்கள் .மேலும் கோவாவில் உள்ள பல்வேறு பார்கள் மற்றும் பப்களில் கார்டு மூலம் பணத்தை செலவு செய்தனர் .அதன் மூலம் அவர்கள் 3.10 லட்ச ரூபாய் பணம் செலவு செய்துள்ளார்கள் .பின்னர் இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரிய வந்ததும் அவர் அருகிலுள்ள சைபர் க்ரைம் போலீசில் புகார் கூறினார் .போலீசார் அந்த பெண்னின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர் .பின்னர் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த சீனிவாசுலு மற்றும் உதய் மனீஷ் ஆகியோரை கைது செய்தார்கள் .

ஆட்டோ கேட்ட பெண் -ஆட்டைய போட்ட வாலிபர்கள் -கோவாவில் கும்மாளம் அடித்த  கூட்டம்