உஷார் !ஆன்லைன் ஆர்டரில் அதிகரிக்கும் மோசடி -அக்கௌன்ட் நம்பர் மூலம் ஆட்டையை போடும் கூட்டம்..

 

உஷார் !ஆன்லைன் ஆர்டரில் அதிகரிக்கும் மோசடி -அக்கௌன்ட் நம்பர் மூலம் ஆட்டையை போடும் கூட்டம்..

இந்த ஊரடங்கு நேரத்தில் வெளியே போக முடியாததால் பலர் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள் .இதனால் பல ஆன்லைன் மோசடிகளும் நடந்து வருகின்றன .பலரின் அகௌண்ட் நம்பரை வைத்து அவர்களின் அக்கௌன்ட்டிலிருந்து பணம் திருடும் கூட்டம் பெருகியுள்ளது .

உஷார் !ஆன்லைன் ஆர்டரில் அதிகரிக்கும் மோசடி -அக்கௌன்ட் நம்பர் மூலம் ஆட்டையை போடும் கூட்டம்..அகமதாபாத்தின் சாஹிபாக் பகுதியில் வசிக்கும் ரிச்சா அமின் என்ற பெண், இந்த கொரானாவால் ஏற்பட்ட ஊரடங்கு நேரத்தில் வெளியே போக பயந்து கொண்டு ஆன்லைனில் ஒரு பேண்ட்டை 199 ரூபாய்க்கு ஆர்டர் செய்தார் .ஆனால் அவர் ஆர்டர் செய்து ஓரிரு வாரங்களாகியும் அந்த பேண்ட்டை அந்த நிறுவனம் டெலிவரி செய்யவில்லை .இதனால் அவர் அந்த நிறுவனத்தின் தொலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அதில் பேசிய ஒரு நபர் ,”மேடம் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் இன்னும் வரவில்லை அதனால் உங்கள் பணத்தை திருப்பி தந்து விடுகிறோம் ,உங்கள் டெபிட் கார்டு விவரத்தை தரவும்”என்று கூறினார் .

உஷார் !ஆன்லைன் ஆர்டரில் அதிகரிக்கும் மோசடி -அக்கௌன்ட் நம்பர் மூலம் ஆட்டையை போடும் கூட்டம்..இதை நம்பிய ரிச்சா அமின் தன்னுடைய டெபிட் கார்டு மற்றும் அக்கௌன்ட் விவரங்களை கொடுத்துள்ளார் .உடனே அந்த நபர் அவரின் அக்கௌன்ட் விவரங்களை வைத்து அவரின் கணக்கிலிருந்த 35000 ரூபாயையும் மொத்தமாக ஆட்டைய போட்டுவிட்டார் .
தன்னுடைய அக்கௌன்ட்டிலிருந்து 35000 ரூபாய் எடுக்கப்பட்ட மெசேஜ் அவருக்கு வந்ததும் ,முன்பு பேசிய அந்த நபரின் போனுக்கு தொடர்பு கொண்டால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்,பலமுறை அந்த நம்பருக்கு ட்ரை பண்ணி கிடைக்காத விரக்தியில் சைபர் க்ரைம் போலீசை தொடர்பு கொண்டு புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .