“இருபது லட்சம் தர்றேன் அவனை கொன்னுடுங்க” -தொழிலதிபரை கூலிப்படையை ஏவி கொல்ல திட்டமிட்ட பெண்..

 

“இருபது லட்சம் தர்றேன் அவனை கொன்னுடுங்க” -தொழிலதிபரை கூலிப்படையை ஏவி கொல்ல திட்டமிட்ட பெண்..

பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள தமர்கோட் துணைப்பிரிவில் ஒரு மருந்தக உரிமையாளருக்கு லவ்லி என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது .இந்நிலையில் அவர்கள் உறவில் திடீரென ஏதோ காரணத்தால் விரிசல் வந்துள்ளது .இதனால் அந்த பெண் அவரை கொல்ல திட்டமிட்டார் .இதற்காக இரண்டு பேரை கூலிப்படையாக ஏவிவிட்டார்

“இருபது லட்சம் தர்றேன் அவனை கொன்னுடுங்க” -தொழிலதிபரை கூலிப்படையை ஏவி கொல்ல திட்டமிட்ட பெண்..அவர்களில் ஒருவர் சுக்பிரீத் சிங் இன்னொருவர் மோகா மாவட்டத்தின் லாவோட் கிராமத்தைச் சேர்ந்த போஹர் சிங் .அந்த இருவரிடமும் அந்த பெண் லவ்லி அந்த மருந்துக்கடை உரிமையாளரை கொலை செய்ய 20 லட்சம் பேசி, ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் .அதை பெற்றுக்கொண்ட அவர்கள் அந்த மருந்தக உரிமையாளரை ஒரு காரில் கடத்திக்கொண்டு சென்றனர் .
பிறகு அவரை காரில் வைத்துக்கொண்டு நகரம் முழுவதும்இரண்டு மணி நேரம் சுற்றி வந்துள்ளனர் .இந்நிலையில் அவர் கடத்தப்பட்ட விஷயம் போலீசாருக்கு

“இருபது லட்சம் தர்றேன் அவனை கொன்னுடுங்க” -தொழிலதிபரை கூலிப்படையை ஏவி கொல்ல திட்டமிட்ட பெண்..

தெரிந்துவிட்டது .அவர்கள் அவரின் செல்போன் சிக்னல் மூலம் ட்ரேஸ் செய்து அவர்களின் காரை மடக்கினர் .பிறகு அந்த மருந்தக உரிமையாளரை மீட்டனர் .பிறகு அந்த இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்தனர் .இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து கூலிப்படையை ஏவிவிட்ட அந்த பெண்ணை தேடி வருகின்றனர் .மேலும் அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கியை போலீசார் மீட்டனர். இந்த கடத்தல் முயற்சியில் அவர்கள் பறித்த ரூ .4.2 லட்சம் ரொக்கம், தங்க ஆபரணங்கள், வெளிநாட்டு நாணயம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் உரிமம் பெற்ற ரிவால்வர் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.