ஒரு வாலிபர் தான் காதலித்த பெண் தன்னை ஏமாற்றிய கோபத்தில் அவரை ஸ்க்ரூ டிரைவர் கொண்டு தாக்கிய கொடுமை நடந்துள்ளது .

பெங்களூருவில் காமக்ஷிபல்யாவின் கெம்பேகவுடா தொழில்துறை கார்டனில் வசிக்கும் மஞ்சுநாத் என்ற வாலிபரும் ஸ்ரேயா என்ற 18 வயதான பெண்ணும் காதலித்து வந்தார்கள் .இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தார்கள் .அதனால் மஞ்சுநாத் அந்த காதலி ஸ்ரேயாவை கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்று கனவு கண்டு வந்தார் .இந்நிலையில் கடந்த மாதம் அந்தத் காதலி ஸ்ரேயா திடீரென அவரின் காதலனோடு பேசுவதை நிறுத்தி கொண்டார் .அதன் காரணமாக அந்த காதலன் அதிர்ச்சியடைந்தார் .அதனால் அந்த காதலன் மஞ்சுநாத் அவரின் காதலியோடு பேச பலமுறை முயன்றார் .ஆனால் அப்போதெல்லாம் அவரின் காதலி அவரின் போனை கட் செய்து விட்டார் .
அதனால் கடும் கோபமுற்ற அவரின் காதலன் மஞ்சுநாத் நேராக அவரின் காதலியின் வீட்டிற்கு சென்றார் .அங்கு அவரின் காதலியிடம் தன்னுடைய போனை கட் செய்தததை கண்டித்து கடுமையாக சண்டை போட்டு விட்டு வந்தார் .
அதன் பிறகு ஜனவரி 9ம் தேதியன்று ஷ்ரேயா தன்னுடைய தோழிகள் மற்றும் உறவினரோடு அங்குள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்று விட்டு வந்தார் .அப்போது அந்த காதலியின் வீட்டிற்கு வந்த மஞ்சுநாத் அந்த காதலியை தான் கொண்டுவந்திருந்த ஸ்க்ரூ டிரைவர் கொண்டு உடல் முழுவதும் குத்தினார் .இதனால் பலத்த காயமடைந்த அவரை அருகிலுள்ள ஹாஸ்பிடலுக்கு தூக்கி சென்றார்கள் ..அதன் பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை கொலை செய்த காதலனை வலை வீசி தேடி வருகிறார்கள் .
