உயிரை காப்பாற்ற வேண்டிய நர்ஸ் உயிரை எடுத்தார் -ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நர்ஸ்

உயிரை காப்பாற்ற வேண்டிய நர்ஸ் உயிரை எடுத்தார் -ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நர்ஸ்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒரே குடுமபத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து ராஜஸ்தான் மாநிலத்தில் குடியேறினார்கள் .அவர்களில் ப்ரியா என்ற பெண் மட்டுமே நர்ஸ் வேலை பார்த்து சமபாதித்து வந்துள்ளார் .மற்ற அனைவருமே அவரின் வருமானத்தில் சாப்பிடுகிறார்கள் .அந்த குடும்பத்தில் ஒரு வயதான மாமியார் உள்பட ஆறு பேர குழந்தைகள் இருந்தார்கள்.

உயிரை காப்பாற்ற வேண்டிய நர்ஸ் உயிரை எடுத்தார் -ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நர்ஸ்
இந்நிலையில் கடந்த வாரம் அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த நர்ஸ் ப்ரியா சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு விஷத்தினை கலந்து கொடுத்துள்ளார் .அதை சாப்பிட்ட அனைவரும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இறந்து விட்டார்கள் .அதற்கு பிறகு அந்த நர்ஸ் தான் ஒரு விஷ ஊசியை தன்னுடைய நரம்பில் செலுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் .அந்த குடும்பத்தில் ரவி என்ற ஒரே ஒருவர் மட்டுமே தப்பியுள்ளார் ,ஏனென்றால் அவர் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்தார் .
மறுநாள் இந்த கொலைகள் பற்றி தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து பிரேதத்தினை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .பிறகு அந்த வீட்டில் உயிர் தப்பிய ரவியிடம் போலீசார் இந்த கொலைக்கான காரணத்தை பற்றி விசாரித்தபோது , அனைவரும் கடுமையான் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் ,மேலும் அந்த வீட்டின் மாமியார் அனைவரையும் கொடுமைப்படுத்தியதாகவும் ,அதுமட்டுமல்லாமல் அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்ததால் குடியுரிமை சிக்கலிருப்பதாகவும் ,இதனால் இந்த வீட்டின் உறுப்பினர்களை அந்த நர்ஸ் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்

உயிரை காப்பாற்ற வேண்டிய நர்ஸ் உயிரை எடுத்தார் -ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நர்ஸ்