“சைக்கிள்ல போகும்போதா இந்த வேலைய செய்வே” -சாலையில் விரட்டிப்பிடித்த பெண்

 

“சைக்கிள்ல போகும்போதா இந்த வேலைய செய்வே” -சாலையில் விரட்டிப்பிடித்த பெண்


சைக்கிளில் சென்ற ஒரு வாலிபர் ,நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் ஈவ் டீசிங் செய்ததால் நடுரோட்டில் அந்த பெண்ணால் விரட்டி பிடிக்கப்பட்டார் .

“சைக்கிள்ல போகும்போதா இந்த வேலைய செய்வே” -சாலையில் விரட்டிப்பிடித்த பெண்


டெல்லிக்கு அருகிலுள்ள உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் வசிக்கும் வீரே என்ற பெண் அங்குள்ள ஒரு பெட்ரோல் பம்பில் வேலை செய்கிறார் .அந்த பெண் தினமும் அந்த பம்பிற்கு நடந்து வேலைக்கு செல்லும் வழக்கமுள்ளவர் .அதன் படி கடந்த வாரம் அவர் காலை 10 மணியளவில் வேலைக்கு நடந்து சென்று கொண்டிடிந்தார் .அப்போது ஒரு வாலிபர் அவரின் பின்னாடி சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் .அப்போது அந்த வாலிபர் எவரும் எதிர்பாராவிதமாக அந்த பெண்ணின் இடுப்பில் தட்டிவிட்டு சென்றார் .இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அதிர்ச்சியடைந்தார் .அப்போது ஒரு கார் குறுக்கே வந்ததால் அந்த வாலிபரை அவரால் பிடிக்க முடியவில்லை .
இருந்தாலும் அவர் உடனே சுதாரித்துக்கொண்டு அந்த வாலிபரை அந்த சாலையில் பொது மக்கள் முன்னிலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று பிடித்து உதைத்தார் .அதன் பிறகு அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார் .இந்த காட்சியை பார்த்த அங்கிருந்த சிலர் அந்த பெண்ணுக்கு உதவ முன்வராமல் வீடியோ எடுத்தது இன்னும் வேதனையான சம்பவமாகும் .பின்னர் இது பற்றி அந்த பெண் கூறுகையில் கடந்த ஆறு ஆண்டுகளாக இதே பகுதியில் வேலை செய்வதாகவும் ஆனால் இது போல ஒரு சம்பவம் இது வரை நடக்கவில்லை என்று கூறினார் .பின்னர் இந்த வீடியோ சமுக ஊடகத்தில் வைரலானது.பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க விசாரித்து வருகிறார்கள் .