வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் .

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.
டெல்லியில் இரண்டு நாளைக்கு முன்பு அங்குள்ள சாலையில் ,போலீஸ் சீருடை அணிந்த ஒரு பெண் சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி ட்ராபிக் விதியை மீறியதாக கூறி போலியான ரசீது கொடுத்து பணம் வசூலித்தார் .அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் செல்லும் வாகனம் மற்றும் மாஸ்க் அணியாமல் செல்வோர் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் செல்வோர் ஆகியோரையும் நிறுத்தி ஒரு ரசீதை கொடுத்து பணம் வசூல் செய்தார் .
இதை பார்த்த சிலர் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு பெண் சாலையில் வசூல் செய்வதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் உடனே விரைந்து வந்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்த போது ,அவர் போலியான போலீஸ் சீருடையில் இப்படி பல மாதமாக பல இடங்களில் போலியான ரசீது கொடுத்து பொது மக்களை ஏமாற்றி பண வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.பிறகு அந்த பெண்ணின் மீது மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர் .
கடந்த ஆண்டு டிசம்பரில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 38 வயது பாதுகாப்பு காவலர் ஒருவர் , இந்திய போலீஸ் சேவை (ஐ.பி.எஸ்) அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.