” உங்களுக்கு கொரோனா பாசிடிவ்” : போன் காலால் வணிக வளாகத்தில் அமர்ந்து கதறி அழுத இளம்பெண்!

” உங்களுக்கு கொரோனா பாசிடிவ்” : போன் காலால் வணிக வளாகத்தில் அமர்ந்து கதறி அழுத இளம்பெண்!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதுவரை உலகம் முழுவதும்1 கோடியே 09 லட்சத்து 73 ஆயிரத்து 896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

” உங்களுக்கு கொரோனா பாசிடிவ்” : போன் காலால் வணிக வளாகத்தில் அமர்ந்து கதறி அழுத இளம்பெண்!

இந்நிலையில் சீன நாட்டின் பீஜிங்கின் வணிகவளாகத்திற்கு வந்த பெண்ணுக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று எதிர்முனையில் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட அந்தப் பெண் அதிர்ச்சியில் கதறி அழுகிறார். அங்கிருப்பவர்கள் அந்தப் பெண்ணின் நிலைமையை புரிந்து அங்கிருந்து விலகி செல்கின்றனர். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. வணிக வளாகத்துக்கு வெளியே அமர்ந்து கதறி அழும் அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸில் வரும் சுகாதார ஊழியர் அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். இந்த வீடியோ காண்போரை கலங்க செய்துள்ளது.

” உங்களுக்கு கொரோனா பாசிடிவ்” : போன் காலால் வணிக வளாகத்தில் அமர்ந்து கதறி அழுத இளம்பெண்!

கொரோனா வந்து விட்டால் மரணம் நிச்சயம் என்று மக்கள் நினைத்து பயந்து நடுங்கும் நிலையில் அந்த இளம் பெண்ணின் கதறல் பலரையும் உருக்குலைய செய்துள்ளது.

https://twitter.com/sanverde/status/1278667344558972928