kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


அம்மாவை அப்பா, பாட்டி, அத்தை தான் எரித்து கொன்றனர்: 5 வயது சிறுமியின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

கொலை
கொலை
Loading...

ஸ்ரவஸ்தி: தனது தாயை தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் தான் எரித்து கொலை செய்ததாக 5 வயது சிறுமி போலீசில்  வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் ஸ்ரவஸ்தி மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் நபீஸ். இவருக்கு சாயிஷா  என்ற மனைவியும், பாத்திமா என்ற 5 வயது மகளும் உள்ளனர். நபீஸ் மும்பையில் பணியாற்றி வருகிறார். நபீஸ்  சில வாரங்களுக்கு  முன்பு போனில் சாயிஷாவுக்கு  முத்தலாக் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாயிஷா  இதுகுறித்து கடந்த 6ஆம் தேதி போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் அளித்த புகாரை ஏற்க மறுத்த காவல்துறை கணவர் ஊரிலிருந்து வந்ததும் அழைத்து வாருங்கள் என்று சொல்லி திருப்பி அனுப்பியுள்ளது. 

talaq

கடந்த 15 ஆம் தேதி ஊருக்கு வந்த நபீஸ், மனைவியை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு வீட்டிலிருந்த நபீஸின் அப்பா அசிஸூல்லா, பாட்டி ஹசீனா, சகோதரிகள் நாதிரா, குடியா ஆகியோர் சாயிஷாவை தாக்கியுள்ளனர். 

அப்போது நபீஸின்  சகோதரி நாதிரா, சாயிஷா மீது மண்ணெண்ணெயை  ஊற்றியுள்ளார்.  அசிஸுல்லாவும் ஹசீனாவும் தீக்குச்சியை உரசி அவர் மீது எறிந்துள்ளனர். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி சாயிஷா  துடிதுடித்துள்ளார். இந்த கொடுமை அனைத்தையும் சாயிஷாவின் 5 வயது மகள் பாத்திமா பார்த்துள்ளார். 

fire


இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சாயிஷாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால்  அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது தனது தாய்க்கு நடந்த கொடுமைகளைச் சிறுமி பாத்திமா, ஒன்றுவிடாமல் கூற போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

இந்த கொலை சம்பவம் குறித்து கூறும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ஸ்ரீவத்ஸா , குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். சாயிஷா  கொடுத்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது' என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.