• February
    17
    Monday

Main Area

Main



பாத்ரூமுக்குள் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

snake / ttn
snake / ttn

லண்டன்: இங்கிலாந்தில் ஒரு பெண்ணின் வீட்டு குளியலறைக்குள் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தின் பிர்கன்ஹெட் நகரில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் முதல் மாடியில் வசித்து வருகிறார். இவரது வீட்டு குளியலறைக்குள் சுமார் 8 அடி நீளம் கொண்ட போவா கன்ஸ்ட்ரிக்ட்டர் வகை மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை பிடித்துச் சென்றனர்.

snake / top tamil news

இதையடுத்து அந்த வீட்டு குளியலறைக்குள் மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற புகைப்படங்களை மெர்சிசைடு போலீசார் பேஸ்புக்கில் பதிவிட்டனர்.

snake / top tamil news

ஒரு புகைப்படத்தில் பாம்பு சின்க்கில் சுருட்டிக் கொண்டு படுத்திருந்தது. மற்றொரு புகைப்படத்தில் பார்க்கையில், பாம்பு பாத்டப்பில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த புகைப்படங்களை கண்ட பலரும் அதிர்ச்சியுற்றனர். மேலும், பாம்பை விரைந்து சென்று பிடித்த போலீசாருக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.