அரசு மருத்துவமனையின் அடைக்கப்பட்ட கதவு -தாயின் உயிரைக்காக்க தட்டிய மகன் -மருத்துவர்கள் இல்லாததால் வாசலிலேயே போன உயிர் ..

அரசு மருத்துவமனையின் அடைக்கப்பட்ட கதவு -தாயின் உயிரைக்காக்க தட்டிய மகன் -மருத்துவர்கள் இல்லாததால் வாசலிலேயே போன உயிர் ..

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் ஒரு இளைஞர் விபத்தில் காயமடைந்த தன்னுடைய வயதான தாய்க்கு சிகிச்சையளிக்க வந்தபோது அந்த சமூக மையம் பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார் .இதனால் பூட்டப்பட்டிருந்த அந்த சுகாதார மையத்தின் கதவுகளை அவர் தட்டிக்கொண்டே இருந்தார் .ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை .அவர் அந்த மையத்தின் வெளியே நின்று கூச்சலிட்டு பார்த்தும் ஒருவரும் கதவை திறக்கவில்லை .இதனால் அந்த வயதான தாய்க்கு சிகிச்சையளிக்க முடியாததால் அவர் அந்த மையத்தின் வாசலிலேயே மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியளிக்க வைத்துள்ளது .இது அந்த மையத்தின் மருத்துவர்களின் அலட்சியத்தினையும், அக்கறையின்மையும் காமிக்கிறது .

அரசு மருத்துவமனையின் அடைக்கப்பட்ட கதவு -தாயின் உயிரைக்காக்க தட்டிய மகன் -மருத்துவர்கள் இல்லாததால் வாசலிலேயே போன உயிர் ..

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பினை உண்டு பண்ணியுள்ளது .
இந்த சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள் வர சிறிது நேரம் பிடித்தது. பின்னர் இறந்த வயதான பெண்ணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், அதுவரை அந்தப் பெண் பலத்த காயத்துடன் மருத்துவமனை வாசலில் துடி துடித்து இறந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது . இப்போது இந்த சம்பவத்தை மறைக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் முயற்சிப்பதாகத் தெரிகிறது.இதனால் இந்த சம்பவம் பற்றியறிந்த மூத்த மருத்துவ அதிகாரி அந்த பகுதி மருத்துவர்களிடையே இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்