காரிலேயே பிரசவம் நடக்க உதவிய போலீஸ் அதிகாரி பெயரை குழந்தைக்கு சூட்டிய தாய்!

 

காரிலேயே பிரசவம் நடக்க உதவிய போலீஸ் அதிகாரி பெயரை குழந்தைக்கு சூட்டிய தாய்!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் அவரது சகோதரர் கர்ப்பிணியை காரில் அழைத்துக்கொண்டு ஜோத்பூர் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த கார் திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது. அந்த சமயத்தில் இளம்பெண்ணிசக்கு பிரசவ வலி அதிகமாக, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் துணை கமிஷனர் பிரீத்தி சந்திரா என்பவர் அந்த பெண்ணுக்கு காரிலேயே பிரசவம் பார்க்க உதவி செய்துள்ளார். சக பெண் காவலர்கள் துணையுடன் துணையை காரைச்சுற்றி மறைத்து பிரசவத்தை மேற்கொண்டார்.

காரிலேயே பிரசவம் நடக்க உதவிய போலீஸ் அதிகாரி பெயரை குழந்தைக்கு சூட்டிய தாய்!

அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பெண்ணுக்கு காரிலேயே சுக பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் காவல்துறையினரின் வாகனத்தில் மருத்துவமனைக்கு தாயும், சேயும் அனுப்பிவைக்கப்பட்டனர். குழந்தையைப் பெற்றெடுந்த அந்த பெண், தனது குழந்தைக்கு, பிரசவத்திற்கு உதவிய போலீஸ் அதிகாரியின் பெயரான பிரீத்தி சந்திரா என்ற பெயரை தனது குழந்தைக்கு சூட்டி நன்றி தெரிவித்தார்.