இண்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தை : வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய சலுகை!

 

இண்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தை : வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய சலுகை!

இண்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற இண்டிகோவின் 6E 122 விமானத்தில் கர்ப்பிணி ஒருவர் நேற்று பயணம் செய்துள்ளார். அவருக்கு விமானத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த விமான பணிப்பெண்களின் உதவியுடன் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இண்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தை : வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய சலுகை!

இதுகுறித்து இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “6E 122 டெல்லி – பெங்களூரு வழியில் விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையும் , தாயும் நலமாக உள்ளனர். அப்பெண்ணுக்கு உதவிய ஊழியர்களுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் விமானத்தில் பிறந்த அக்குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இண்டிகோ விமானத்தில் இலவசமாக பயணிக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.