வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை – கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பு

 

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை – கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பு

மதுரை

மதுரையில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துதகொண்ட வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஞானவேல். இவர் 2002ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கோமதி என்பவரை திருமணம் செய்த நிலையில், அவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோமதி, கடந்த 2007ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை – கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பு

இதுதொடர்பாக கோமதியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானவேலை கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இறுதி விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருபாகரன் மதுரம், வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் ஞானவேலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.