• February
    25
    Tuesday

Main Area

Main



காதல் ப்ரொபோஸ் செய்வதில் பலவிதம்… இது கொஞ்சம் காஸ்ட்லீதான் சகோ..! 

china-girl-proposes-his-boyfriend
china-girl-proposes-his-boyfriend

காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த படாதபாடு படுவர். என்ன கிஃப்ட் கொடுத்து இம்ப்ரஸ் பண்ணலாம், என்ன செய்தால் அவர்களுக்கு புடிக்கும் என மண்டையை  உடைத்துக்கொல்வார்களே தவிர உருப்படியான யோசனைகளை செய்து அசத்துவதில் எப்போதும் வெளிநாட்டு காதலர்கள்தான் எப்போதும் டாப்! அப்படி ஒரு தரமான சம்பவம் சமீபத்தில் சீனாவில் நடந்திருக்கிறது.சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் தனது பாய் பிரிண்டுக்கு ப்ரொபோஸ் செய்த விதத்தை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர்! மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்டிங்கில் உள்ளது! அப்படி என்னதான் செய்து ப்ரொபோஸ் பண்ணாங்க?!

சீனாவில் சியா ஜிங்(Xiao Jing) என்ற 24 வயது பெண் தனது பாய் பிரிண்ட் சியாஓ கே (Xiao Ke)விற்கு சொத்து பத்திரத்தையும், BMW கார் ஒன்றின் சாவியையும் சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக தந்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். தவிர, அவர் திருமண ஆடையில் தோன்றி பாய் ஃபிரண்டை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். 

இது முதல் சந்திப்பின் போது கொடுத்ததல்ல… காதலித்து ஒரு வருடம் ஆனதையொட்டி அதைக்  கொண்டாட, இப்படிக் காஸ்ட்லி ஐட்டமா கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்ன வென்றால் முதல் சந்திப்பில் கே தன்னை ப்ரொபோஸ் செய்த அதே இடமான cultural exhibition hall லில் வைத்து ஜிங் அவரை திருமண செய்ய கேட்டபோது சர்பரைஸ் ஆன கே சற்றும் யோசிக்காமல் சரி என்று சொல்லியிருக்கிறார்.அதனால், அதே இடத்தில் மீண்டும் சந்தித்து நினைவுப் பரிசைக் கொடுத்ததில் காதலர்கள் இருவருக்கும் கொள்ளை மகிழ்ச்சி! 

இத்தனை ஏற்பாடுகளையம் ஜிங், தனது குடும்பத்தினரின் உதவியோடு செய்ததாகவும், லோக்கல் ரிப்போர்ட்ஸின் படி ஜிங் தனது பாய் பிரிண்டிற்கு பரிசளித்த வீடும் BMW காரும் ஜிங்கின் பெற்றோர் ஸ்பான்சர் செய்தவை என்று கூறுகிறது. ஜிங் கூறியதாவது,"எனக்கு பொருட்கள் முக்கியமல்ல என்னை எப்போதும் நன்கு பார்த்துக்கொள்ளும் எனது பாய் பிரிண்டிற்கு நான் செய்தது ஒன்றுமே இல்லை" என்று கூலாகச் சொல்லியிருக்கார்.

 

2018 TopTamilNews. All rights reserved.