Home க்ரைம் "வா கண்ணா ,ஒண்ணா இருக்கலாம்" -நம்பி போன வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

“வா கண்ணா ,ஒண்ணா இருக்கலாம்” -நம்பி போன வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

ஊடகத்தில் சந்தித்த ஒரு தோழியோடு உல்லாசமாக இருக்க சென்ற வாலிபரை மிரட்டி பணம் பறித்த கூட்டத்தினை போலீசார் பிடித்துள்ளார்கள்

This picture has been used for representational purposes

உத்திரப்பிரதேச மாநிலம் ஹப்பூர் பகுதியில் ஒரு வாலிபர் எந்நேரமும் பேஸ் புக்கில் பெண்களோடு அரட்டையடித்து வந்துள்ளார் .அப்போது அவருக்கு ‘மஹி ராணா’ என்ற பெண் தோழியானார் .உடனே அந்த நபரும் ஜொள்ளு விட்டுக்கொண்டு அந்த பெண்ணிடம் தன்னுடைய அரட்டை கச்சேரியை தொடங்கினார் .
நாளடைவில் இருவரின் நட்பும் ரொம்ப இறுகி நேரில் சந்தித்து குஜாலா இருக்கு முடிவெடுத்தார்கள் .அந்த பெண்ணிடம் அந்த நபர் ‘அந்த’ விஷயத்துக்கு கேட்டதும், அந்த பெண்ணும் உடனே அதற்கு சம்மதித்து ஒரு இடத்திற்கு வர சொன்னார் .
உடனே அதைக்கேட்டு சந்தோசமடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணோடு ஜாலியாக இருக்க கிளம்பி செப்டம்பர் 15ம் தேதியன்று போனார் .ஆனால் அந்த பெண்ணை சந்திக்க போன இடத்தில் அந்த பெண்ணோடு மேலும் சிலரும் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார் .அதனால் அவருக்கு சந்தேகம் வந்து அங்கிருந்து நழுவி ஓடுவதற்கு முயற்சித்தபோது, அந்த பெண்ணும் மற்றும் சில ஆண்கள் ,பெண்கள் அணைவரும் சேர்ந்து அவரை மடக்கி கட்டி வைத்து , அவரை பணம் கேட்டு மிரட்ட தொடங்கினர். உடனே ஐந்து லட்ச ரூபாய் தரவில்லையென்றால் இந்த பெண்ணை நீ பலாத்காரம் செய்ததாக போலீசில் புகாரளிப்போம் என்று மிரட்ட தொடங்கினார்கள் .அதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று கூறியதும் , அவரிடமிருந்த தங்க சங்கிலி மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு துரத்தி விட்டார்கள் அவற்றின் மதிப்பு 1 லட்சம் என்று அந்த வாலிபர் கூறினார் .பிறகு அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து அந்த பெண்ணோடு சேர்த்து சங்கீத ,டானி மற்றும் ஹர்ஷித் ஆகியோரையும் கைது செய்தார்கள்

cash crunch

மாவட்ட செய்திகள்

Most Popular

“குறைகளை தெரிவிக்க, விரைவில் செல்போன் செயலி” – ஆட்சியர் தகவல்

தர்மபுரி கொரோனா காலத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே ஆட்சியரிடம் புகார் மனுக்களை தெரிவிக்கும் விதமாக செல்போன் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தர்மபுரி...

காரைக்கால்: தேசிய ஒற்றுமை நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், சர்தார் பல்லபாய் படேலின் 145-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர், முதுநிலை எஸ்.பி., மற்றும் அரசுத்துறை அதிகாரிகள்...

”சக ஊழியர் மனநிலை அறியலாம்” – ”கேண்டீன் உணவு சுவையை அதிகரிக்கலாம்?” ”2030க்குள் எதிர்பார்க்கப்படும் டெக் மாற்றங்கள் ” !

2030ம் ஆண்டுக்குள் அலுவலகத்தில் உள்ள சக ஊழியரின் மனநிலை குறித்து அறிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தை மக்கள் எதிர்பார்ப்பது எரிக்சன் நிறுவனம் மேற்கொண்ட புதுமையான ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏரியில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே ஏரியில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!