“அந்த வீடியோவுல இருக்கிற மாதிரி நாமும் வித விதமா இருக்கலாம்” -பெண்ணுக்கு டாக்டரின் பாலியல் டார்ச்சர் .

 

“அந்த வீடியோவுல இருக்கிற மாதிரி நாமும் வித விதமா இருக்கலாம்” -பெண்ணுக்கு டாக்டரின் பாலியல் டார்ச்சர் .


ஒரு டாக்டர் கணவரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது

“அந்த வீடியோவுல இருக்கிற மாதிரி நாமும் வித விதமா இருக்கலாம்” -பெண்ணுக்கு டாக்டரின் பாலியல் டார்ச்சர் .


குஜராத் மாநிலத்தில் டாக்டர் படேல் என்பவரும் , ஹர்ஷா என்ற பெண்ணும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.இந்நிலையில் அந்த டாக்டர் படேல் தினமும் பலான படங்களை பார்த்துவிட்டு அதிலிருப்பது போல உறவு கொள்ள மனைவியை வற்புறுத்தியுள்ளார் .அதற்கு அந்த ஹர்ஷா மறுத்துள்ளார் .இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது .இந்த குடும்ப சண்டையில் அவரின் மாமியாரும் அடிக்கடி மூக்கை நுழைப்பாராம் .அப்போதெல்லாம் அந்த மாமியாரும் வரதட்சணை கேட்டு அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளார் .ஒருமுறை அவரை அவரின் வீட்டின் மாடியிலிருந்து தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளார் .
இதனால் கடுமையான மன விரக்தியிலிருந்த அந்த ஹர்ஷா பிப்ரவரி 9ம் தேதியன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .இதனால் அவரின் தந்தை தன்னுடைய மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் கூறினார் .அவரின் புகாரின் அடிப்படையில் போலீசார் இறந்த பெண்ணின் வீட்டில் சோதனை செய்தார்கள் .அப்போது அங்கு அவர் எழுதி வைத்திருந்த 18 பக்கமுள்ள தற்கொலை குறிப்பை கைப்பற்றினார்கள் .அதன் பிறகு அந்த தற்கொலை குறிப்பை பிரித்து படித்த போலீசார் அதிலிருந்த குறிப்பை படித்து பார்த்து அதிர்ந்து போனார்கள் .அந்த குறிப்பில் அந்த பெண் தன்னுடைய டாக்டர் கணவரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமலும் ,மாமியாரின் கொடுமை தாங்க முடியாமலும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தார் .இதனால் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர்.

“அந்த வீடியோவுல இருக்கிற மாதிரி நாமும் வித விதமா இருக்கலாம்” -பெண்ணுக்கு டாக்டரின் பாலியல் டார்ச்சர் .