கோவையில் கோவில்களை திறக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி!

 

கோவையில் கோவில்களை திறக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி!

கோவை

கோவையில் கோவில்களை திறக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர், சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது, மனு அளிக்க வந்த நடுத்தர வயது பெண் ஒருவர், அலுவலக வாயில் முன்பு திடீரென சாணிப் பவுடரை குடிக்க முயன்றார். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விரைந்து சென்று அவரிடம் இருந்த சாணிப்பவுடரை பறித்து கீழே கொட்டினர்.

கோவையில் கோவில்களை திறக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி!

அப்போது, பேசிய அந்த பெண், ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடி மாதம் முழுவதும் பெண்கள் விரதமிருந்து அம்மனை வழிபடுவது வழக்கம் என்றும், ஊரடங்கு காரணமாக தொடர்ந்து கோவில்கள் மூடப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று சுவாமியை தரிசிக்க வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே கோனியம்மன், தண்டு மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களை திறக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனை அடுத்து, அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் பூமார்க்கெட் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (40) என்பதும், அவர் தண்டுமாரியம்மன் கோவில் முன் பூ வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. அதனை அடுத்து, அவரை அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.