darbar
  • January
    20
    Monday

Main Area

Main



ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி!

தீக்குளிக்க முயன்ற ரேணுகா
தீக்குளிக்க முயன்ற ரேணுகா

ஹைதராபாத்: கணவர் அளித்த தொந்திரவு காரணமாக மனமுடைந்த பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் எல்.பி.நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த ராஜையா, தற்போது சங்காரெட்டி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ரேணுகா என்பவருக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமனமாகியுள்ளது. ஆனால், ராஜையாவுக்கு ஏற்கனவே திருமனமாகியுள்ளதாகவும், அதனை தன்னிடம் மறைத்து திருமணம் செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டும் ரேணுகா, இது தொடர்பாக கடந்த 2018-ஆம் புகார் அளித்துள்ளார். அந்த வழக்கு தற்போது லோக் அதாலத் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது.

ஆனால், இது தொடர்பான வழக்குப்பதிவில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. விசாரணைக்கு பின்னர் குற்றப்பத்திரிகையும் விரைந்து தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் இருவரும் சமாதானத்திற்கு வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ரேணுகா கூறுகையில் எனது கணவர் ராஜையா அவரது இரண்டாவது மனைவியை வைத்து எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் போலி புகார் கொடுத்ததாகவும், இது தொடர்பாக காவல்துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

fire dead

காவல்துறை அனுப்பிய  நோட்டஸாலும். தனது கணவருக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் காட்டும் தாமதத்தாலும் மனமுடைந்த ரேணுகா, ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தனது குழந்தைகளை அழைத்துக் கொன்று பெட்ரோல் பாட்டிலுடன் வந்துள்ளார். இதையடுத்து, தன் மீதும் தன்னுடைய குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றிய ரேணுகா தீ வைக்க முயற்சி செய்துள்ளார்.

அந்த சமயத்தில் செய்தியாளர் சந்திப்பிற்கு கமிஷனர் மகேஷ் பகவத் அழைத்திருந்ததால் அங்கு திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் இதனை கவனித்துள்ளனர். தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் முயற்சியால் அவரது தீக்குளிப்பு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேணுகாவும், அவரது குழந்தைகளும் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதையும் வாசிங்க

3 ஆண்டுகளாக வன்புணர்வு செய்யப்பட்ட பெண்; சினிமா வாய்ப்பு தேடும் பெண்களே எச்சரிக்கை?!

2018 TopTamilNews. All rights reserved.