வருவாய் குறைந்தாலும் லாபமாக ரூ.760 கோடி அள்ளிய வோக்ஹார்ட்

 

வருவாய் குறைந்தாலும் லாபமாக ரூ.760 கோடி அள்ளிய வோக்ஹார்ட்

2020 ஜூன் காலாண்டில் வோக்ஹார்ட் நிறுவனம ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.759.75 கோடி ஈட்டியுள்ளது.
மருந்து துறை நிறுவனமான வோக்ஹார்ட் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் வோக்ஹார்ட் நிறுவனம ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.759.75 கோடி ஈட்டியுள்ளது. 2019 ஜூன் காலாண்டில் வோக்ஹார்ட் நிறுவனத்துக்கு ரூ.36.88 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

வருவாய் குறைந்தாலும் லாபமாக ரூ.760 கோடி அள்ளிய வோக்ஹார்ட்
வோக்ஹார்ட்

2020 ஜூன் காலாண்டில் வோக்ஹார்ட் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.606.22 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.733.66 கோடியாக உயர்ந்து இருந்தது. கடந்த காலாண்டில் வோக்ஹார்ட் நிறுவனத்தின வருவாய் குறைந்துள்ளபோதிலும் லாபம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருவாய் குறைந்தாலும் லாபமாக ரூ.760 கோடி அள்ளிய வோக்ஹார்ட்
மாத்திரைகள்

வோக்ஹார்ட் நிறுவனம் கடந்த காலாண்டில் இந்திய சந்தையில் புதிய கெமிக்கல் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. எம்ராக் ஓ மற்றும் எம்ராக் என்ற பிராண்டு பெயரில் மாத்திரை மற்றும் ஊசிகள் பிரிவின் கீழ் தயாரிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன இந்த தகவலை ஹோக்ஹார்ட் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.