உலகிலேயே முதல்முறையாக… டிரம்பின் ட்விட்டர் கணக்குக்கு நிரந்தர மூடுவிழா!

 

உலகிலேயே முதல்முறையாக… டிரம்பின் ட்விட்டர் கணக்குக்கு நிரந்தர மூடுவிழா!

நிறுவனத்தின் கொள்கைகளை மீறி வன்முறையைத் தூண்டும் விதமாகத் தொடர்ச்சியாகப் பதிவுகள் இட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்பின் கணக்குக்கு நிரந்தரமாக மூடுவிழா நடத்தியுள்ளது ட்விட்டர்.

அதிபர் ஒருவரின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவது இதுவே முதல்முறை. இதனிடையே தன்னுடைய கருத்துகளைச் சுதந்திரமாகப் பதிவுசெய்ய சொந்தமாக ஒரு வலைதளத்தை உருவாக்கும் திட்டம் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நிகழ்ந்த வன்முறைக்கு முழுமுதற் காரணம் அதிபர் டிரம்ப் தான் என பல உலக நாடுகளின் தலைவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். உலக நாடுகள் முன்பு அமெரிக்காவுக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாக அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

உலகிலேயே முதல்முறையாக… டிரம்பின் ட்விட்டர் கணக்குக்கு நிரந்தர மூடுவிழா!

வன்முறை அரங்கேறி கொண்டிருக்கும்போது கூட டிரம்ப் ஆதரவாளர்களைக் கண்டிக்காமல் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவே பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது கருத்தைப் பதிவுசெய்தார்.

அதனால் டிரம்பின் பதிவுகளால் அமெரிக்காவில் அமைதி சீர்குலையும் என்று கூறி பேஸ்புக் நிறுவனம் காலவரையின்றி அவரது கணக்கை முடக்கிவைத்துள்ளது.

தற்போது ட்விட்டர் நிறுவனம் ஒருபடி மேலே சென்று அவரது கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக அறிவித்துள்ளது; முடக்கியும் விட்டது. ஆரம்பத்தில் தற்காலிகமாக அவரின் கணக்கை முடக்கிவைத்திருந்த ட்விட்டர், வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டால் நிரந்தரமாக முடக்கப்படும் என்று எச்சரித்தது.

உலகிலேயே முதல்முறையாக… டிரம்பின் ட்விட்டர் கணக்குக்கு நிரந்தர மூடுவிழா!

ஆனால் டிரம்ப் அதற்குச் செவிமடுக்காமல் ட்விட்டர் தனது கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகக் குற்றம் சுமத்தினார். ட்விட்டர் இடதுசாரிகளுக்கு ஆதரவளித்து தன்னைப் பேசவிடாமல் செய்வதாகவும் கூறினார்.

ட்விட்டர் தனது பதிவுகளை நீக்கியதால் அதிருப்தியில் இருந்த அவர், எதிர்காலத்தில் தனக்குச் சொந்தமாக ஒரு வலைதளத்தை உருவாக்கும் திட்டம் இருப்பதாகக் கூறினார்.

இச்சூழலில் தங்களது கொள்கை மற்றும் விதிமுறைகளை மீறி வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி டிரம்பின் கணக்குக்கு நிரந்தரமாக மூடுவிழா நடத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர், “சமீப நாட்களாக டிரம்ப் இட்ட பதிவுகளை ஆய்வு செய்ததில், வன்முறையைத் தூண்டும் விதமான கருத்துகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

உலகிலேயே முதல்முறையாக… டிரம்பின் ட்விட்டர் கணக்குக்கு நிரந்தர மூடுவிழா!

தேர்தலில் தோல்விபெற்றதிலிருந்து ஜோ பைடன் முறைகேடுகளை நிகழ்த்தி வெற்றிபெற்றதாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகக் கருத்தை டிரம்ப் பதிவுசெய்து வந்தார்.

அதன் விளைவாகவே வன்முறை வெடித்துள்ளதாகக் கூறி அவரது கணக்குகள் வரிசையாக முடக்கப்பட்டுவருகின்றன. உலகிலேயே அதிபர் ஒருவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படுவது இதுவே முதல்முறை.

இத்தகைய மோசமான சாதனையைச் சம்பாரித்த டிரம்ப், அதிபர் பதவிக்கும் அமெரிக்காவுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திருப்பதாக அமெரிக்க மக்கள் கொந்தளித்துள்ளனர்.